சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏழை எளிய சாமானிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் அவர் அவர் சொந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு கொண்டு செல்லும் பணத்திற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை நியமித்து நெருக்கடி நிலை உருவாக்குவதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் இந்திய தேர்தல் அணையத்தை வன்மையாக கண்டிகிறது. விவசாயிகள் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு பல்வேறு நிலையில் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டால் தமிழகத்தில் அடுத்த ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்காமல் தேர்தலை புறகணிப்பு செய்யும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி பகிரங்க அறிவிப்பு தேர்தல் ஆணையத்திற்கு.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியினை அறிவித்தது. அதன் அடிப்படையில் தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி அறிக்கையின் வாயிலாக வன்மையான கண்டனத்தை தமிழக தேர்தல் ஆணையத்திற்கு பதிவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு வருகிற ஏப்ரல் மாதம் 23.4.2026 அன்று நடைபெறவுள்ளதாக நேற்று மாலை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு விதிமுறைகள், தேர்தல் அறிப்பு வெளியான நேரத்தில் இருந்து அமுள் படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களை விற்பனை செய்த பின்பு பணம் எடுத்துச் செல்லும்போதும் தங்கள் கால்நடைகளை விற்பனை செய்து பணம் எடுத்துச் செல்லும் போதும் மேலும் புதிதாக கால்நடைகளை வாங்குவதற்காக பணம் எடுத்துச் செல்லும் போதும் விவசாய இடு பொருள்களை வாங்குவதற்கு பணம் எடுத்துச் செல்லும் போதும், ரூ.50,000 மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்கின்றனர். எனக்கூறி தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள். அடுத்த வாரத்தில் ரமலான் பண்டிகையின் காரணமாக விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கால்நடை சந்தைகளில் விற்று வருவர் எந்த கால்நடை சந்தையிலும் கணினி ரசீது கொடுத்து வியாபாரம் செய்யப்படுவதில்லை. இதனால் கால்நடைகளை வாங்குவதற்கு வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரத்து இல்லாமல் போகும் அதனால் கால்நடைகள் விலை குறையும் இதேபோல் வேளாண் விளைபொருள் வர்த்தகம் செய்ய வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகப்படியாக வரத்து இல்லாமல் விவசாயிகள் விளை பொருட்கள் விலை மிக குறையும் வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி,
இந்திய தேர்தல் ஆணையம் அரசியல்வாதிகள் தவறான முறையில் பயன்படுத்தும் நிதியை கண்காணிப்பு செய்யாமல் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏழை எளிய சாமானிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும் அவர் அவர் சொந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு கொண்டு செல்லும் பணத்திற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை நியமித்து நெருக்கடி நிலை உருவாக்குவதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் இந்திய தேர்தல் அணையத்தை வன்மையாக கண்டிகிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அவர், மேலும் இதேபோல் தவறான முறையில் நடந்துகொண்டு விவசாயிகள் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு பல்வேறு நிலையில் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டால் தமிழகத்தில் அடுத்த ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்காமல் தேர்தலை புறகணிப்பு செய்யும் நிலைமை உருவாகும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நினைவுபடுத்துகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தனது கண்டன அறிக்கையில், R.வேலுசாமி.
மாநிலத் தலைவர்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளார்.



0 coment rios: