சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
11 சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள். தொகுதி முழுவதும் ரஜினி ரசிகர்களுக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.
2026 சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில் அதிமுக திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நற்பணி மன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர பக்தரான பாரப்பட்டி கனகராஜ் தலைமையிலான ரஜினி ரசிகர்கள், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிக்கு பழனிச்சாமி அவர்களை சந்தித்து சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் ரஜினி ரசிகர்கள் ஆகிய நாங்கள் முழு ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர்கள், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடும் அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக அரசின் சாதனைகள் குறித்தும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிக்காக சென்ற ரஜினி ரசிகர்களுக்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து ஆரத்தி எடுத்தும் பட்டாசுகளை வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு என்டிஏ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டுவதும் வாக்குகளை சேகரிப்பதும் மாவட்ட மக்களிடையே மிகுந்து வரவேற்பினை பெற்றுள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. இந்த நிகழ்ச்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர்களும் நிர்வாகிகளுமான புருஷோத்தமன் இளம்பிள்ளை சின்னமணி, சூரமங்கலம் செல்வராஜ், குருமூர்த்தி, கிச்சிபாளையம் ரமேஷ், ராமன், சுக்கம்பட்டி பிரபு, தமிழ், பூபதி சித்தன், சண்முகம், நவீன் தங்கராஜ், யோகா ராஜா,சேட்டு ஸ்ரீதர், சீனி மற்றும் ஆலமரத்தான் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



0 coment rios: