சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட ஈகைப் பெருநாள் சந்திப்பு... மனிதநேய பண்பாளர் விருது வழங்கி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச் செயலாளர் இமாம் மொஹீதின் கௌரவிக்கப்பட்டார்.
சேலம் பொன்னம்மாபேட்டை சுன்னத் ஜமாத் நிர்வாகம் சார்பாக இதயங்களை இணைக்கும் ஈகைப் பெருநாள் சந்திப்பை அனைத்து மதத்தினர் சார்பாக நடைபெற்றது. பள்ளிவாசலின் முத்தவல்லி சத்தார் மற்றும் செயலாளர் இனாமுல் ஹசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,
முன்னாள் 35வது கோட்ட மாமன்ற உறுப்பினர் நசீர் அகமது, தற்போதைய 31 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் சையது மூசா மற்றும் அம்மாபேட்டை ஜமாத் நாயக் முத்தவல்லியும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச்செயலாளருமான இமாம் மொஹிதின், வரலாற்றுச் சங்கம் சார்பாக டிராவல்ஸ் பாபு, தொழிலதிபர் ஈசன் எழில் விழியன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட பலரும் தங்களின் அழகிய கருத்துக்களை பகிர்ந்தனர். மேலும் தனது கருத்துக்களையும் பகிர்ந்த ஷேக் இமாம் அவர்களுக்கு சிறந்த மனிதநேய பண்பாளர் என்கின்ற அடிப்படையில் விருதையும் வழங்கி கௌரவித்தனர். தன்னை கண்ணியப்படுத்திய ஜமாத்தார்களுக்கும் வல்ல இறைவனுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச்செயலாளர் இமாம். மொஹிதின்.



0 coment rios: