சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
அதிமுக தேர்தல் அறிக்கையில் விடுபட்ட தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை இடம்பெற செய்யும் வகையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், வருகின்ற 23ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் விவசாயிகளை தொலைநோக்குப் பார்வையுடன் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில், தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி, நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் நிலத்தடி நீரை செறிஊட்டும் வகையில், ஆற்று படுகைகளில் மழை வெள்ள உபரி நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் தடுப்பணை கட்டப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக கட்சி வழங்கிய காரணத்தினால், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக கட்சி 2026 இல் தேர்தல் அறிக்கையில் தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒரு சில கோரிக்கைகள் இடம்பெறவில்லை. இடம்பெறாத கோரிக்கைகள் தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகள் ஆகும். தேர்தல் அறிக்கையில் தற்போது இடம்பெற செய்யும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில், 14 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய படிவத்தை மாநில மற்றும் நிர்வாகிகள், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் நேரில் சந்தித்து வழங்கினர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே பல திட்டங்கள் நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது, தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள 16 கூட்டுறவு ஆலைகள் மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை மீட்டெடுத்து கரும்பு விவசாயிகளுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைக்கவும் எத்தனால் தயாரிக்க இனிவரும் காலங்களில் தாங்கள் வழிவகை செய்ய வேண்டும், தமிழகத்தில் தென்னை மற்றும் பனை கள் கலப்படம் என்று கூறி தமிழக அரசு விதிக்கப்பட்டுள்ள நிரந்தர தடையை தென்னை மற்றும் பனை தொழிலாளர்களின் நலன் கருதி நீண்ட கால கோரிக்கையான கள்ளுக்கு தடை நீக்க ஏற்பாடு செய்ய வேண்டும் மற்றும் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் எருமை மற்றும் பசும்பாலுக்கு தற்பொழுது கொடுக்கப்படும் விலையில் இருந்து இனிவரும் காலங்களில் 15 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகள் அடங்கிய படிவத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சி அமைந்த உடன் தங்களது கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்ததாக வேலுச்சாமி நம்முடைய தெரிவித்தார்.



0 coment rios: