சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
தேசிய பாராளுமன்ற தொகுதி வரையரை. மத்திய அரசு கொண்டு வரும் புதிய தொகுதி வரையரை BJP க்கு மட்டும் சொந்தமல்ல. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி அவர்களின் கருத்தும் விளக்கமும்.
அதன்படி அவர் வெளியில் உள்ள அறிக்கையில், எந்த தேசிய மாநில கட்சிகளும் மக்களுக்கு சேவை செய்து அவர்களின் நம்பிக்கை பெற்று வெற்றி பெறலாம். மேலும் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பு, பெரிய நாடாளுமன்ற தொகுதிகள் பிரிப்பதால் மக்களின் சேவை எளிதாக்கபடும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு உதாரணமாக,. தமிழகத்தில் பல மாவட்டங்கள்பிரித்து 38 மாவட்டங்கள் உருவாகியது.
38 மாவட்ட ஆட்சித்தலைவர்கள், 38 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வட்டம் ஒன்றியம் உருவாகி மக்களுக்கு சேவை எளிதாக கிடைக்கபட்டது.
இன்னும் தெளிவாக சொல்லபோனால்,.
சேலம் மாவட்டம் ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கள்ளகுறிச்சி பிரிக்கபட்டதால் மக்கள் அதிகாரிகளை பார்க்க சேலம் வர தேவையில்லை. மக்களின் சேவை அங்கவே கிடைக்கபட்டது.
அதுபோல,. பாராளுமன்ற தொகுதி பிரிப்பு, எண்ணிக்கை அதிகரிப்பும் மக்களின் சேவை மைய்படுத்துயது. இதை வெறுமனே அரசியல் நோக்கோடும், பாரதிய ஜனதாவிற்கே வாய்ப்பு அதிகம் என கூறுவது தங்கள் கட்சி மீது நீங்களே நம்பிக்கை இல்லாமல் இருப்பது தெளிவுபடுத்துகின்றது என்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி தனது கருத்தையும் விளக்கத்தையும் பதிவிட்டுள்ளார்.



0 coment rios: