சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
திருமண கோலத்தில் ஜனநாயக கடமை ஆற்றிய சேலம் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அஜித் சாக்கோ.
2026 ஆம் ஆண்டிற்கான சட்டப் பேரவை தேர்தல், தமிழக முழுவதும் என்று ஒரே கட்டமாக நடைபெற்றது. நான்கு முனை போட்டி நிலவிய, சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு சாவடி மையங்களில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். அந்த வகையில், தமிழகத்தில் தமிழகத்தில் தேர்தல் திருவிழா ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, இன்று அதே நாளில் முக்கிய முகூர்த்த நாளும் கூட. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியவர்.
இது ஒரு புறம் இருக்க, முக்கிய சுப முகூர்த்த நாளான இன்று அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அஜித் சாக்கோவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு சுப முகூர்த்த உடையிலேயே கணவனும் மனைவியுமாக அஜித் சாக்கோ தம்பதியினர், ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட, சேலம் மாவட்டம் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடி மையத்திற்கு வந்திருந்தனர். அப்போது ஜனநாயக கடமை ஆற்ற நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர் பெருமக்களும், பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல்துறையினரும், தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிகாரிகள் உட்பட பணியாளர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இதனை அடுத்து தங்களது வாக்குச்சாவடிக்குள் சென்ற புதுமண தம்பதியினர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவில் கலந்து கொண்டனர்.
திருமணம் முடித்த கையோடு சேலம் கிழக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் வழக்கறிஞருமான அஜித் சாக்கோ தனது மனைவியுடன் திருமண கோலத்தில் வாக்களிக்க வந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது மட்டும் நிதர்சனம். காலை 7 மணிக்கு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்றது. அந்த வகையில் ஆறு மணி நிலவரப்படி தமிழக முழுவதும் 84.51 விழுக்காடு வாக்குகளும், இதேபோல 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில் 90.28 விழுக்காடு வாக்கு பதிவு நடைபெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது கூடுதல் தகவலாக உள்ளது.



0 coment rios: