செவ்வாய், 7 ஏப்ரல், 2026

சேலம் மேற்கு தொகுதி NDA கூட்டணி வேட்பாளர் மு. கார்த்தி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த வாக்காள பெருமக்கள். மகிழ்ச்சியின் திளைத்த பாமக வேட்பாளர் மு கார்த்தி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மேற்கு தொகுதி NDA கூட்டணி வேட்பாளர் மு. கார்த்தி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த வாக்காள பெருமக்கள். மகிழ்ச்சியின் திளைத்த பாமக வேட்பாளர் மு கார்த்தி. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழக முழுவதும் நடைபெற உள்ளது. இந்திய மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில், NDA கூட்டணியில் பாமகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மு. கார்த்தி சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகின்றார். கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட அவர், இன்று சேலம் அழகாபுரம் தென் அழகாபுரம், மிட்டாபுதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திறந்தவெளி வாகனங்களில் சென்றும் நடந்தே சென்றோம் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். என் டி ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடை சூழ மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் கார்த்தி சென்ற இடங்கள் வழி நெடுங்கிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து மலர்களை தூவியும் பட்டாசுகளை வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மிட்டா புத்தூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற பாமக வேட்பாளர்கள் கார்த்தி சுவாமி தரிசனம் செய்து தனது வாக்கு சேகரிப்பு பணியை மீண்டும் தொடங்கினார். 
அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில், மேற்கு தொகுதி உட்பட 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அதீத வரவேற்பை பொதுமக்கள் வரவேற்பை வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றும், மேற்கு தொகுதியை பொருத்தவரை இதுவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏராளமான மனுக்கள் கொடுத்தும் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்கப்படாததால் தற்போது அது போன்ற மனுக்களில் தன்னிடம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்த மு கார்த்தி, வெற்றியடைந்த உடன் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களின் தேவைகளை அனைத்தையும் ஒன்று கூட விடுபடாமல் பூர்த்தி செய்து தருவேன் என்று உறுதியளித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: