சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வேலுச்சாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில். NDA கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம். போலிச் சங்கத்தின் பெயரில் சேலத்தில் நடைபெற்று வந்த மாநில தலைவர்கள் பிரச்சனையில் முற்றுப்புள்ளி.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த அதி முக்கியமான ஆலோசனை கூட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர்கள் ராஜா பெருமாள், மூர்த்தி, மாநில செயலாளர் கணபதி, மாநில பொருளாளர் சீட்டு உளிட்டோர் முன்னிலை வகித்த இந்த தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஏழுமலை வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க செயல்பாடுகள் குறித்தும் தற்பொழுது நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் சங்கம் எடுக்கப்படவுள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர் நடைபெற்ற கூட்டத்தில், ஏற்கனவே நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் தமிழக விவசாயிகளுக்கு என்று தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என்பது தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த சாட்டாகவே இருந்து வரும் நிலையில், விவசாயிகளின் நலனை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டிப்பது என உட்பட 14 தீர்மானங்கள் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டன. அது மட்டுமில்லாமல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் போலிச் சங்கம் ஒன்று தற்பொழுது தமிழகத்தில் தொடங்கப்பட்டு தேவையற்ற குழப்பங்களை விளைவித்து வருவது தொடர்பாகவும் பல்வேறு கண்டன தீர்மானங்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் அந்த சங்கத்தின் மாநில தலைவர் சிவபெருமாளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.
இதனை எடுத்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்களை அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணி தலைவர் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் அறிக்கையில் கூறியது வரவேற்கத்தக்க இருந்ததாகவும் அதன் காரணமாக இந்த முடிவு அதிமுகவிற்கு நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிப்பது என்றும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த எந்த ஒரு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் திட்டங்களை எதுவும் செயல்படுத்தாததால் இந்த முடிவை எடுத்ததாக திட்டவட்டமாக தெரிவித்தார் தலைவர் வேலுச்சாமி.
தமிழக தேர்தல் என்னவோ வரும் 23ஆம் தேதி தான் நடைபெற உள்ளது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை அதனைத் தொடர்ந்துதான் வெற்றி யாருக்கு என்று அறிவிக்க ப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இதனிடையே உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தங்களுக்கு தான் சொந்தம் என்று போட்டியிட்டவர்களுக்கு மத்தியில் நேற்று சேலத்தில் நடைபெற்ற வேலுச்சாமி அவர்களின் தலைமையிலான கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் நிதர்சனம்.
விவசாயிகள் சங்க பிரச்சனை தீர்ந்தது என்று எடுத்துக் கொண்டாலுமே கூட, தமிழகத் தேர்தல் முடிவுருக்காக காத்திருக்கத்தான் வேண்டும் மக்களே.



0 coment rios: