சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மேற்கு தொகுதி NDA கூட்டணி வேட்பாளர் மு. கார்த்திக்கு பூக்களை வாரி இறைத்து உற்சாக வரவேற்பு அளித்த வாக்காள பெருமக்கள்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழக முழுவதும் நடைபெற உள்ளது. இந்திய மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில், NDA கூட்டணியில் பாமகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மு. கார்த்தி சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகின்றார். கடந்த ஆறு நாட்களாக மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் நல்லாட்சி மலர்ந்திடவும், அவரது ஆசி பெற்ற சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு கார்த்தி கொண்ட நாயக்கன்பட்டி மற்றும் செட்டிச்சாவடி ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
பிற்பகல் மல்லமூப்பம்பட்டி மற்றும் ஐயம்பெருமான் பட்டி ஊராட்சிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வாகனத்திலும், ஒரு சில பகுதிகளில் நடந்தே சென்றும் மாம்பழம் சின்னத்தில் தன்னை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார். என் டி ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடை சூழ மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் கார்த்தி சென்ற இடங்கள் வழி நெடுங்கிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்களை வாரி இறைத்தும், வீட்டின் மொட்டை மாடியில் இருந்து மலர்களை தூவியும் பட்டாசுகளை வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில், மேற்கு தொகுதி உட்பட 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அதீத வரவேற்பை பொதுமக்கள் வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றும், மேற்கு தொகுதியை பொருத்தவரை இதுவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏராளமான மனுக்கள் கொடுத்தும் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்கப்படாததால் தற்போது அது போன்ற மனுக்கள் தன்னிடம் பொதுமக்கள் கொடுத்து வருவதாகவும் தெரிவித்த மு கார்த்தி, வெற்றியடைந்த உடன் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களின் தேவைகளை அனைத்தையும் ஒன்று கூட விடுபடாமல் பூர்த்தி செய்து தருவேன் என்று உறுதியளித்தார். வாக்கு சேகரிப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்த பகுதியைச் சேர்ந்த கோபால் மற்றும் இளங்கோ உள்ளிட்டோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.



0 coment rios: