வெள்ளி, 10 ஏப்ரல், 2026

சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரஜினி ரசிகர்கள் அ.தி.மு.க விற்கு ஆதரவு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு

சேலத்தில் 
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரஜினி ரசிகர்கள் அ.தி.மு.க விற்கு ஆதரவு

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாரப்பட்டி கனகராஜ். தொழிலதிபரான இவர் கடந்த 30 ஆண்டுகளாக எந்த அரசியல் அமைப்பையும் சாராமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீர பக்தனாகவே பயணித்து வந்தவர். ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகரான இவர் இன்று தனது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்கிறார். முன்னதாக, சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள் சேலம் பாரப்பட்டி கனகராஜ் தலைமையில், அ.தி.மு.க பொது செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர்  முதல்வராக இருந்தபோது விவசாயிகளுக்கு எண்ணற்ற  திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார்.
குறிப்பாக மேட்டூர் உபரிநீரை 100  ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம், குடிமாரத்து திட்டம், குளம் ஏரிகளில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கும் திட்டம், மீன்தேன் திட்டத்தை தடுக்க  டெல்டா மாவட்டம் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தார். தற்போது  விவசாயிகள் கடன் தள்ளுபடி என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். நாங்கள் அவரிடம் சில கோரிக்கைகள் வைத்துள்ளோம். அதில் சேலம் பனமரத்துப்பட்டியை தூர் வாரி ஏரியில் நீர் நிரப்பி சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும். இதனால் பனமரத்துப்பட்டி பகுதியில் குடிநீர்  பிரச்சனை தீர்க்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி நம்ம ஊரைச் சேர்ந்தவர் அவர் முதலமைச்சராக வரவேண்டும். அவரை எப்போது வேண்டு மானாலும் சந்தித்து நமது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்றார். சேலம் மாவட்ட 11 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற அயராது பாடுபடுவோம் என்றார். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை எத்தனை அரசியல் கட்சிகள் புதிதாக உதய மாநாடுமே கூட தமிழக வரலாற்றில் அதிமுக திமுக என்ற இரு திராவிட கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும் போதெல்லாம் தமிழக மக்களும் விவசாய பெருமக்களும் எந்த விதமான எந்த விதமான பாதிப்புக்கும் உள்ளானது கிடையாது அதே வேளையில், திமுக ஆட்சி காலத்தின் போது எல்லாம் சட்டம் ஒழுங்கு என்பதை கேள்விக்குறியே ஆகியுள்ளதோடு தமிழக மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலே எப்பொழுதும் நிகழும் என்று குறிப்பிட்ட பாரப்பட்டி கனகராஜ், 11 சட்டமன்ற எல்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும், அதிமுக அரசின் சாதனைகளை குறித்து பட்டியலிட்டு வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் தெரிவித்ததோடு விரைவில் தமிழக முழுவதும் உள்ள அத்தனை ரஜினி ரசிகர்களையும் அதிமுகவின் வசம் ஆதரவு செலுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்வுகளின் போது சேலம் மாவட்ட நிர்வாகிகள் புருசோத்தமன், குருமூர்த்தி, சூரமங்கலம் செல்வராஜ், பெத்தநாயக்கன்பாளையம் வேலுசாமி, இளம்பிள்ளை சின்னமணி, வீரபாண்டி பூபதி, சித்தன், ராஜா, சீரகாபாடி துரை சண்முகம், ஏத்தாப்பூர் சுரேஷ், பார்த்திபன் குமரவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: