சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் கடை பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை. டாஸ்மாக் லிமிடெட் நிறுவனத்தின் சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் கடும் எச்சரிக்கை.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அமைந்த உடன் தமிழக முழுவதும் 917 மதுபான கடைகள் மூடப்படுவது என முடிவு செய்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் பணியாளர்களை கண்டு கொள்ளாத மாவட்ட மேலாளர்கள் மீது மிகக் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று தமிழக அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்தது. இது தொடர்பாக சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் தமிழக அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதாக புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பார்வையில் காணும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தலைமை அலுவலக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட மேலாளரும் சேலம் மாவட்ட துணை ஆட்சியருமான பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். எனவே சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் தலைமை அலுவலக சுற்றறிக்கையை மீறி மதுபானங்களை அரசு நிர்ணயித்த விலையை விட ுதல் விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து கடை பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்படுவதாக சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் இதேபோன்று பலமுறை அப்போதைய அமைச்சராக இருந்த முத்துசாமி பல்வேறு வகையான எச்சரிக்கைகள் விடுத்தும், கண்டுகொள்ளாத ஒவ்வொரு மாவட்ட மேலாளர்களும் மாவட்டங்களில் பணியாற்றும் பணியாளர்களும், தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் உத்தரவை எவ்வாறு செயல்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



0 coment rios: