சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
முதலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், நடிகர் சூர்யா நடித்த படத்தை பின்னுக்கு தள்ளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தன்னுடைய படத்தின் டைட்டிலை தனுஷ் திரைப்படத்திற்கு வைத்துள்ளது குறித்து வழக்கு போட்டுள்ளேன் என படத்தின் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் சேலத்தில் பேட்டி
தயாரிப்பாளர் சங்கம் என்பது ஒரு தலைப்பட்சமாகவும் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே சங்கமாக உள்ளது
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் பெயர்பதிவு செய்யப்பட்டது ஆனால் தனுஷ் படத்திற்கு இதனை பயன்படுத்தி விட்டதாகவும் குற்றம் சாட்டி வழக்கு....
சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சி சேர்ந்தவர் வேங்கை ஐயனார் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மல்லூர் பேரூராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு அவர் துணைத் தலைவராகவும் அவரது மனைவி தலைவராகவும் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் அவர்களுக்கான உதவிகளையும் செய்து வருகின்றனர் மக்கள் பணி போக தற்பொழுது திரைத்துறையில் அவர்களது பணியும் வந்துள்ளது குறிப்பாக ஏற்கனவே வெட்டு திரைபடம் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த சமுதாயத்தில் தவறு செய்பவர்களை கண்டறிந்து அவர்களது உடல் அங்கங்களை வெட்டி முதலைக்கு வீசி தனது பலியை தீர்த்துக் கொள்ளும் நபர் ஒருவரை மையமாகக் கொண்டு படம் தயாரிக்க வேண்டும் என அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த கரா திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் இந்த திரைப்படம் வெளியான நிலையில் மக்கள்
குழந்தைகளுடன் சென்று ஆர்வமாக இந்த முதலை மையமாக வைத்து வெளிவந்த படத்தை பார்த்து வருகின்றனர்.
சேலத்தில் உள்ள திரையரங்குகளில்
மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று நமது ஊரை சேர்ந்தவர் தயாரித்த படம் பார்க்க வேண்டும் என்ற மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.
தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் கூறுகையில், தமிழ் திரைப்பட வரலாற்றில் முதலை மட்டும் மையமாக வைத்து இதுவரை திரைப்படம் எடுக்கப்படவில்லை இந்த திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பிடித்த படமாக வெளிவந்துள்ளது.
இந்த சூழலில் இன்று வெளியான நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழக முழுவதும் தற்பொழுது மக்கள் வரவேற்பு அதிகரித்ததை எடுத்து மேலும் 100 திரையரங்குகள் அதிகரிப்பதற்கான பணிகளும் தொடங்கியுள்ளது என்றும் இந்தத் திரைப்படத்தின் டைட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துவிட்டேன். ஆனால் தன்னுடைய படத்தின் டைட்டிலை நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள கர என்ற படத்திற்கு
பயன்படுத்தி உள்ளனர். இது குறித்து வழக்கு தொடர்ந்து உள்ளேன். இந்த திரைப்படத்தின் டைட்டில் முழுமையாக என்னை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் நான் தற்பொழுது இந்த திரைப்படத்தை வெளியிட்டுள்ளேன் என்றார். பழக்கடை சோதனைகளுக்கு பிறகு வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தினை தொடர்ந்து என்டர் தி டிராகன், தாலி மற்றும் தோனி பாய்ஸ் படங்களுக்கான பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஜித் மற்றும் தனுஷ் ஆகியோரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆவலும் உள்ளதாகவும் அதற்கான காலம் நேரம் சூழல் அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட வேங்கை அய்யனார்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்பது ஒரு தலைவச்சமாகவும் குறிப்பாக அரசியல் சார்ந்தவர்களுக்கும் பணம் பலம் படைத்தவர்களுக்குமான தயாரிப்பாளர் சங்கமாகவே உள்ளது என்றும் குற்றம் சாட்டினார். இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியில் கொண்டு வருவதற்குள் மிகப்பெரிய சவாலாகவே இருந்தது எங்கு எடுத்தாலும் தடைகள் அச்சுறுத்தல்கள் என பல்வேறு தடைகளை கடந்து தான் இந்த திரைப்படம் தற்பொழுது வெளிவந்துள்ளது
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்றார்.



0 coment rios: