சேலம்,
S.K. சுரேஷ் பாபு.
.
மேகதாது அணை - மத்திய அரசு தலையிட்டு தமிழக விவசாயிகளை காக்க வேண்டும். தமிழக முதல்வர், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து அடம்பிடித்தால், தமிழக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை வாபஸ் பெற வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கோருகிறோம். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவிராமசாமி வலியுறுத்தல்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில், இந்தியா ஒரு கூட்டாட்சி குடியரசு நாடு. மாநிலங்கள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதே இந்தியாவின் அடிப்படைத் தத்துவம். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சி, 2018 உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் ஏக்கர் பாசன விவசாயம் முற்றிலும் அழிந்து, குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
கர்நாடக துணை முதல்வர் திரு. டி.கே. சிவக்குமார் அவர்களின் தமிழ்நாட்டிற்கு தடுக்க உரிமை இல்லை" என்ற பேச்சு, கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவுக்கும் எதிரானது. இந்த பொறுப்பற்ற பேச்சை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு இயக்கத்தின் முக்கிய கோரிக்கைகளையும் பதிவிட்டுள்ளார்,. அதில்,
1. மத்திய அரசு, மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தை வலுப்படுத்தி, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரை உறுதி செய்ய வேண்டும்.
2. காங்கிரஸ் கட்சி தலைமை திரு. மல்லிகார்ஜுன கார்கே, திரு. ராகுல் காந்தி அவர்கள் கர்நாடக அரசை கட்டுப்படுத்த வேண்டும். கூட்டணி தர்மத்தை காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். 3. தமிழக முதல்வர், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து அடம்பிடித்தால், தமிழக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை வாபஸ் பெற வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கோருகிறோம்.
மாநிலங்கள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து, வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடி. அதை கர்நாடக அரசு மறந்து விடக்கூடாது. நதிநீர் பிரச்சினையை அரசியலாக்கி மக்களை மோதவிடும் போக்கை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் கைவிட வேண்டும் என்றும்
சரஸ்ராம் ரவிராமசாமி
தேசிய ஒருங்கிணைப்பாளர் & நிறுவனர் தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.



0 coment rios: