வெள்ளி, 22 மே, 2026

தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம். கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம். கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கடும் எச்சரிக்கை. 

நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக கர்நாடகா அரசுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அதில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு எந்தவித உரிமையும் உரிமையும் இல்லை என்று கூறிய கர்நாடக துணை முதல்வர் டி கே சிவக்குமார் அவர்களுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பதிலடி கொடுப்பது என்னவென்றால், தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி பங்கேற்று தண்ணீரை கர்நாடக அரசு அங்கு உள்ள அணைகளில் தேக்கி வைக்க எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு உண்டான காவிரி பங்கேற்று தண்ணீரை தினம்தோறும் விகிதாச்சார அடிப்படையில் திறக்க வேண்டும். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை காவிரி ஆற்றின் பாசனப்பகுதி பெரும்பாலும் குருவை, சம்பா மற்றும் தாளடி இரு போகத்தை சாகுபடி பொருத்தவரை ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் ஏக்கருக்கும் மேல் பாசன பகுதி உள்ளது. காவிரி ஆற்றின் பொருத்தமட்டில் முழு உரிமையும் தமிழ்நாட்டிற்கே உள்ளது. என கர்நாடகா அரசு நன்கு உணர வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்து அதற்கான பணி தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டால் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க தமிழக விவசாயிகள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதற்காக இரத்தம் சிந்தவும் தயங்க மாட்டோம். மேலும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையிலான தமிழக விவசாயிகளின் மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி வந்து மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம் என்று அறிக்கையின் வாயிலாக கர்நாடகா அரசை மிகக் கடுமையாக எச்சரிக்கின்றேன் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி பதிவிட்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: