செவ்வாய், 19 மே, 2026

சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அருள் த.வெ.க வில் இணைவது உண்மையல்ல எந்த கட்சிக்கும் செல்லவில்லை. சேலம் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார் திட்டவட்டம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.அருள் த.வெ.க வில் இணைவது உண்மையல்ல எந்த கட்சிக்கும் செல்லவில்லை. சேலம் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார் திட்டவட்டம். 


சேலம் மாணவர் மாவட்ட பாமக மாவட்ட செயலாளராக இருப்பவர் இரா அருள். இவர் ஏற்கனவே பாமகவில் பிளவு ஏற்படாத பட்சத்தில் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். இதனை எடுத்து பாமகவில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனை அடுத்து கட்சியை நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிலர் மேற்கு தொகுதியில் குக்கர் சின்னத்தில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா அருள் மீண்டும் களம் கண்டார். ஏற்கனவே தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வீடு தேடி சென்று கோரிக்கைகளை பெற்று நிவர்த்தி செய்தது உள்ளிட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து இருந்தாலும் கூட அவர் வெற்றிவாக சுடவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் வீசிய சூறாவளியில் தமிழக வெற்றி கழகம் அனைத்து திராவிட கட்சிகள் உட்பட பெரும்பாலான கட்சிகளை சின்னாபின்னமாகி இன்று மிகப்பெரும் கட்சியாக தமிழகத்தில் உருவெடுத்து அதன் கட்சியின் தலைவர் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளர் முன்னாள் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா அருள் கட்சியை விட்டு விலகுவதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதை எடுத்து சில ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் பாமகவிலிருந்து விலகிய இரா அருள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்ற செய்தியை வெளிப்படுத்தி வந்த வண்ணமே இருந்தது. இதற்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ள சேலம் மாநகர் மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் விஜயகுமார். அவர் கூறியிருப்பதாவது, அரசியல் கட்சி மாற்றம் க
குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், அவர் கட்சி மாறுகின்றார் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்று மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: