திங்கள், 25 மே, 2026

தமிழகத்தில் பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த காலங்களைப்போல் பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சருக்கு அறிக்கையின் வாயிலாக கோரிக்கை.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கோரிக்கை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 
தமிழ்நாடு அரசு, விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடனை இன்று தள்ளுபடி செய்துள்ளது. இதில் சிறு, குறு, பெரு விவசாயிகள் என்று பிரித்தாலும் சூழ்ச்சியுடன் பயிர் கடன் தள்ளுபடி செய்ததை, தமிழ்நாடு அரசு மறு பரிசீலனை செய்து பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடந்த காலங்களைப்போல்  பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி  செய்ய வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இந்த அறிக்கையின் மூலம் வலியுறுத்துகிறேன் என்றும் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: