திங்கள், 22 ஜூன், 2026

சேலம் ஓமலூரில் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டு காலம் ஆகியும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டுகளாகியும் ஓய்வூதிய பலன்களை வழங்காமல் ஏமாற்றும் மேட்டூர் சார் ஆட்சியர் மற்றும் ஓமலூர் வட்டாட்சியர். மத்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடும் கண்டனம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் ஓமலூரில் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டு காலம் ஆகியும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டுகளாகியும் ஓய்வூதிய பலன்களை வழங்காமல் ஏமாற்றும் மேட்டூர் சார் ஆட்சியர் மற்றும் ஓமலூர் வட்டாட்சியர். மத்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடும் கண்டனம். 

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்தவர் கோவிந்தராஜ். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இவர் ஓமலூரில் கிராம உதவியாளராக பணியாற்றி கடந்த 2013 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இவர் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டு காலம் ஆகியும் தற்பொழுது வரை ஓய்வூதிய பலன்கள் வழங்காமல் மேட்டூர் சார் ஆட்சியரும், ஓமலூர் வட்டாட்சியர் உட்பட வருவாய்த் துறையினர் தொடர்ச்சியாக கோவிந்தராஜை அலைகழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மற்றும் கோரிக்கை மனு வழங்கியும் தற்போது வரை பாதிக்கப்பட்ட கோவிந்தராஜுக்கு எந்த ஓய்வூதிய பலனும் கிடைக்கவில்லை என்பதால் மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு மற்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் தேசிய ஒருங்கிணைப்பாளரான சரஸ்ராம் ரவிராமசாமி அவர்களை கோவிந்தராஜ் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அவரது அலுவலகத்தில் அணுகினார். 
பாதிக்கப்பட்ட கோவிந்தராஜிற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக 13 ஆண்டுகளாக மனப்பலன்கள் ஏதும் கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் குறித்து முழுமையாக கேட்டு அறிந்த சரஸ்ராம் ரவிராமசாமி நம்மிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் பணியாற்றும் எஸ்சி / எஸ்டி, சீர் மரபினர் மற்றும் பட்டியலின சமுதாயத்தை சார்ந்த ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், அவர்களுக்கான ஓய்வூதிய பலன் மற்றும் பண பலன்கள் ஏதும் முழுமையாக சென்று சேருவதில்லை என்று குற்றம் சாட்டிய அவர், சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு கிராம உதவியாளராக பணியாற்றி பணி ஓய்வு பெற்றார். இவருக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் முழுவதும் தற்பொழுது வரை கொடுக்காமல் மேட்டூர் சார் ஆட்சியரும் ஓமலூர் வட்டாட்சியரும் தொடர்ச்சியாக அலைகழித்து வருவதோடு மட்டுமல்லாமல் வேண்டுமென்றே பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி இழுத்தடிப்பதாகவும் இதனை தேசிய ஒடுக்கப்பட்ட  மக்கள் குடியரசு வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சரஸ்ராம் ரவிராமசாமி, இது சம்பந்தமாக சேலம் மாவட்ட ஆட்சியர்,  தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நேஷனல் கமிஷன் ஐ சேர்ந்த ரவிவர்மன்  ஆகியோருக்கு இன்று காலை புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதே போல் சேலம் மாவட்டம் மேச்சேரியில் 34 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வாட்டர் மேன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவங்கள் தொடர்பாக தாழ்த்தப்பட்ட ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையம் கடந்த 13 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம உதவியாளருக்கு ஓய்வூதிய பலன்களை கொடுக்காமல் ஏமாற்றிய மேட்டூர் சார் ஆட்சியர், ஓமலூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அப்போது நிர்வாகி அடைக்கலம், பாதிக்கப்பட்ட உட்பட  கோவிந்தராஜ் அவரது  குடும்பத்தார் என பலரும் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: