சனி, 20 ஜூன், 2026

இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம். சேலம் மாநகர துணை மேயர் துவக்கி வைத்த இந்த சிறப்பு முகாமில் ஏராளமான ஏழை எளிய மக்கள் கலந்து கொண்டு பயன்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம். சேலம் மாநகர துணை மேயர் துவக்கி வைத்த இந்த சிறப்பு முகாமில் ஏராளமான ஏழை எளிய மக்கள் கலந்து கொண்டு பயன். 

அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியினரால் நாடு முழுவதும் இளைஞர்களின் எழுச்சி திருநாளாகவும், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கமிட்டியின் பொருளாளர் சஞ்சய் காந்தி ஏற்பாட்டில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் சேலத்தில் இன்று நடைபெற்றது.
சேலம் விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து நடத்திய இந்த சிறப்பு மருத்துவ முகாமினை சேலம் மாணவர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான திருமதி சாரதா தேவி மாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். முகாமினை இணைந்து நடத்திய அமைப்புகளின் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்ட இந்த மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமில், பார்வை குறைபாடுகள், கண்புரை பரிசோதனை, கண் சர்க்கரை நோய், கண்புரை அறுவை சிகிச்சை உட்பட கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும், இதே போல ரத்த அழுத்தம், தோல் நோய் பிரச்சனைகள், காது மூக்கு தொண்டை பிரச்சனைகள், இதயம் தொடர்பான பிரச்சனைகள், கர்ப்பகால சிகிச்சை ஆலோசனைகள் உட்பட பொது மருத்துவம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் லைன்மேடு, குகை மற்றும் அன்னதானப்பட்டி உட்படு சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் ஏழை எளியவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்று சென்றனர். 
இந்த சிறப்பு முகாம் துவக்க விழாவில், சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ராஜ்குமார், கந்தசாமி, நடராஜ், ராஜா, சரவணன்,  வெங்கட்ராஜ், கோபி குமரன், பச்சப்பட்டி பழனிச்சாமி மற்றும் உடையாபட்டி பிரகாஷ் என கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் என ஏராளமான கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: