சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சிக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி முழு ஆதரவுடன் தனி தீர்மானம் நிறைவேற்றம்.உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வரவேற்பு.
தமிழகத்தின் 11 டெல்டா மாவட்டங்களில் ஜீவாதாரமாக விளங்கி வரும் மேட்டூர் அணைக்கான நீர் வரத்தை தடுத்து நிறுத்தும் வகையில், கடந்த பல வருடங்களாக கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணைக்கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் கர்நாடகா அரசு தொடர்ந்து தன்னிச்சையாகவே செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக அரசு களின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதோடு அவ்வப்போது சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு வந்தன.
இதனிடையே தமிழக விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கர்நாடக அரசின் இந்த மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பல கட்ட போராட்டங்கள் அறிவித்து அதனை முழுமையாக செயல்படுத்தியும் வந்துள்ளது மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில், தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மேகதாட்டில் அணை கட்டினால் தகர்த்தெறிவோம் என்றும் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் புரட்சி புயலாக உருவாகும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி ஏற்கனவே எச்சரிக்கையை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கர்நாடக அரசின் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மேகதாட்டில் அணைக்கட்டும் முயற்சியை ஏற்க முடியாது, இதன் காரணமாக காவிரி படுகைகளில் தமிழக அரசால் எந்த ஒரு திட்டப் பணிகளையும் மேற்கொள்ள இயலாது, கர்நாடக அரசின் அணைக்கட்டும் விவகாரத்திற்கு இந்த திட்ட அறிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க கூடாது உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தமிழக சட்டப்பேரவையில் கர்நாடக அரசுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனை அடுத்து சட்டப்பேரவையில் இருந்து அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு விடுக்கப்பட்டது. அப்பொழுது பிரதான எதிர்க்கட்சியான திமுக உட்பட அதிமுக என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன் வைத்ததோடு தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட இந்த கர்நாடக அரசுக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு முழு ஆதரவினை தெரிவித்தனர். இதனை அடுத்து பேசிய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தீர்மானம் முன்மொழிந்ததற்கு முழு ஒப்புதல் வழங்கிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்ட அவர், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த பிரத்தியேக தனி நடுவர் மன்றம் அமைக்கும் கோரிக்கையையும் இணைத்து தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவை தலைவருக்கு பரிந்துரைத்தார். இதனை அடுத்து சட்டப்பேரவை தலைவரால் மேகதாட்டில் அணை கட்டும் விவகாரத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒரு மணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
தமிழக அரசால் இன்று முன்மொழிக்கப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட கர்நாடக அரசுக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி தனது வரவேற்பினையும் ஆதரவணையும் தெரிவித்தார்.



0 coment rios: