சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற உலகளவிய தலைப்பை மையமாக கொண்டு
சர்வதேச யோகா தின விழா. 1000 கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தல்.
ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தின விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழ்வாண்டு சர்வதேச யோகா தின விழாவை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது. ஆரோக்கியமான முதுமைக்கான யோகா என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நிகழ்வாண்டு யோகா தின விழா கடைபிடிக்கப்படுகிறது. இதனைபோற்றும் வகையில் சேலம் சோனா கல்லூயின் விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது.
சோனா கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் தியாகுவள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற விழாவில் கல்லூரியின் இயக்குநர் கார்த்திகேயன் சோனா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் செந்தில்குமார், கனகராஜ், காதர்நவாஷ், கவிதா, தர்மசம்வர்த்தினி மற்றும் பேராசிரியர்கள்மற்றும் 1000-த்துகும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி உலகமே ஒன்று சேர்ந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது. இந்த உலகளாவிய நிகழ்வு யோகாவின் பண்டைய இந்திய பயிற்சி மற்றும் உடல், மனம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்தவும், சுறுசுறுப்பான முதுமையை உறுதிப்படுத்தவும் யோகாவின் பங்கினை இது வலியுறுத்துகிறது என்று சோனா கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா தெரிவித்தார்.
இந்த விழாவில் சோனா கல்வி நிறுவனங்களின் மாணவர்களின் யோகா நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து கல்லூரியின் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.



0 coment rios: