வியாழன், 18 ஜூன், 2026

தமிழகம் வெற்றிப்பயணம் என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ் 2026 - 2027 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெரும் வகையில் 34 அம்ச முக்கிய கோரிக்கைகளை துறைவாரியாக நிறைவேற்றி விடுக. த.வெ.க தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள்.

 
சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகம் வெற்றிப்பயணம் என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ் 2026 - 2027 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெரும் வகையில் 34 அம்ச முக்கிய கோரிக்கைகளை துறைவாரியாக நிறைவேற்றி விடுக. த.வெ.க தலைமையிலான தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள். 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தும் வகையில் முக்கிய கடிதம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எழுதியுள்ளார். அதில்,
தமிழக அரசு விவசாய அபிவிரித்திக்காக  பல்வேறு மானிய திட்டங்கள் அறிவித்து செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் வாயிலாக கிடைக்கும் அனைத்து மானியங்களும் இனிவரும் காலங்களில் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்ப தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை மீட்டெடுக்கவும் ஆலைகளின் வருவாயை ஊக்குவிக்கவும் கரும்பிலிருந்து பெறப்படும் எரிபொருளான எத்தனால் தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்க கோரி தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும், தமிழக விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து இறக்கும் கள்ளு க்கு உண்டான தடையை உடனடியாக நீக்க வேண்டும், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி சரபங்கா மேட்டூர் உபரி நீர் திட்டம் மூலம் விடுபட்ட வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பு தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், 
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய காவிரி பங்கிட்டு தண்ணீரை கர்நாடக அரசு தினம் தோறும் விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரை திறந்து விடுவதற்கு தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 34 அம்ச முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றி தர கோரி தமிழக முதலமைச்சர் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் தமிழக முதலமைச்சருக்கு எழுதப்பட்ட இந்த கடிதத்தின் நகலை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களுக்கும்  அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: