சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
தமிழக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 75,000 ரூபாய் வரை மட்டும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வர். பசிக்கு அழும் குழந்தைக்கு பலூன் கொடுப்பது போல் உள்ளது. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி விமர்சனம்.
தமிழக விவசாயிகள் தமிழக கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர் கடனை எந்த விதமான பாகுபாடும் இன்றி முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பது மட்டுமே தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழக விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக உத்தரவு ஒன்றினை பிறப்பித்தார். இது தமிழக விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அவசர அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழக விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய கடனை, சிறு, குறு, பெரு விவசாயிகள் என்ற பாகுபாடின்றி முழுவதும் தள்ளுபடி செய்யாமல், ரூ.75,000/ம் வரை மட்டும் தள்ளுபடி செய்து, இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது, தமிழக விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இது பசிக்கு அழும் குழந்தைக்கு பலூன் கொடுப்பது போல் உள்ளது என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.



0 coment rios: