சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அருகே சாதிய பாகுபாட்டு தாக்குதல். திருக்கோவிலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் பட்டியலினத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி படுகாயம்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சேஷன்சாவடி பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் மாற்றுத்திறனாளி ஆன இவருக்கு கைகள் இல்லை. தனது சகோதரருடன் வாகனம் உள்ளில் கலந்து மூன்று தினங்களுக்கு முன்பு அங்குள்ள பிரசித்தி பெற்ற அஞ்சமலை குட்டை முனியப்பன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். பட்டியலின சமுதாயத்தை சார்ந்த இவர்களை கண்ட அங்குள்ள உயர் ஜாதியினர் மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரையும் ஜாதி பெயரை கூறியும், தகாத சொற்களால் திட்டியும் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் பட்டியலினத்தைச் சார்ந்த மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வாழப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் ஒன்றில் ஜாதியை பாகுபாடு பார்த்து பட்டியல் இனத்தைச் சார்ந்த சகோதரர்களை அங்குள்ள உயர் ஜாதியினர் வகுப்பைச் சார்ந்த ஸ்ரீ டிராவல்ஸ் உரிமையாளர் ராஜா என்பவர் உட்பட ஐந்து பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி ஆன மணிகண்டன் நம்மிடையே கூறுகையில், கோவிலில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் அதனை காவல்துறையினர் கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது ஸ்ரீ டிராவல்ஸ் உரிமையாளர் ராஜா உட்பட ஐந்து பேர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். அருந்ததியினர் பறையர் என கூறி திருக்கோவில் வளாகத்திற்குள்ளேயே பட்டியலினத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி சகோதரர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



0 coment rios: