ஞாயிறு, 28 ஜூன், 2026

வெள்ளி கொலுசு தயாரிப்பது என்பது உருக்குதல், வடிவமைப்பு செய்தல், இணைத்தல் மற்றும் மெருகூட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய 16 கட்டங்களைக் கொண்ட ஒரு கலைநயமிக்க முறையாகும்.

சேலம், 
S.K. சுரேஷ் பாபு. 

வெள்ளி கொலுசு தயாரிப்பது என்பது உருக்குதல், வடிவமைப்பு செய்தல், இணைத்தல் மற்றும் மெருகூட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய 16 கட்டங்களைக் கொண்ட ஒரு கலைநயமிக்க முறையாகும். 

தூய வெள்ளியுடன் அதன் உறுதித்தன்மைக்காக குறிப்பிட்ட அளவு செம்பு சேர்த்து, சிறிய மண் தொட்டியில் கரி மற்றும் உமி கொண்டு சூடாக்கி உருக்கப்படும்.கம்பி தயாரித்தல் தயாரிப்பு முறையின் முக்கிய கட்டங்கள்உருக்குதல் (Melting) அம்சங்களாக கருதப்படுகின்றன. உருகிய வெள்ளி, கம்பி தயாரிக்கும் இயந்திரம் (Wire Machine) மூலம் மெல்லிய கம்பிகளாக மாற்றப்படும். வடிவமைப்பு (Designing): கொலுசுக்கான பூ, அரும்பு, பட்டை, சலங்கை போன்ற பாகங்கள் பிரத்யேக அச்சுகள் (Dies) மற்றும் இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும். 
பின்னர்  பட்டறையில் (Loose Patrai) இந்த பாகங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, சங்கிலி வடிவில் கோர்க்கப்படும்.மெருகூட்டுதல்.
கொலுசு முழுவடிவம் பெற்றதும், மெஷின் பாலிஷ் மற்றும் கை மெருகு (Buffing and Polishing) கொடுக்கப்பட்டு பளபளப்பாக்கப்படும். இவ்வளவு பணிகளை கடந்து பெண்களின் பாதங்களை அலங்கரிக்கும் இந்த சலங்கைகள் பொருந்திய கால் கொலுசுகள் தயாரிப்பு நிறுவனங்களால் ஒரு காலத்தில் சேலம் மாநகரைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது. புவி சார் குறியீடு, உட்படு எண்ணற்ற பெருமைகளை மாங்கனி மாநகர சேலம் மாநகரத்திற்கு பெற்று தந்த ஆளுமை கூட தங்கத்தை போன்று தற்பொழுது நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வெள்ளியின் உயர்வாள் பாதிக்கப்பட்டுள்ளது என்னவோ இந்த தொழிலையே நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களை மட்டுமே என்பதை யாராலும் மறுத்து விட முடியாது. 
சேலம் செவ்வாய்பேட்டை, சேலத்தை அடுக்குள்ள சிவதாபுரம் பனங்காடு திருமலைகிரி உள்ளிட்ட பகுதிகள் ஒரு காலகட்டத்தில் சின்ன சிங்கப்பூர் ஆகவே கருதப்பட்டது காரணம் வெள்ளி கொலுசு தொழில் உச்சத்தில் இருந்த பொழுது. தற்பொழுது தங்கத்தை போன்று நாளுக்கு நாள் வெளியில் விளையும் நிர்ணயிக்கப்படுவதால் சேலம் மாணவருக்கு பெருமை சேர்த்து வந்த இந்த வெள்ளி பொருட்களின் உற்பத்தி தொழில் அதல பாதாளத்திற்கு சென்று மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெள்ளி தொழில் சம்பந்தப்பட்ட அத்துனை பேரும். வெள்ளி வர்த்தகத்தை ஆன்லைனில் நிர்ணயித்தது மட்டுமே என்று குற்றம் சுமத்தும் ஒட்டுமொத்த இந்த தொழிலையே நம்பியுள்ளவர்கள் இதற்கு மூல காரணம் மத்தியில் அங்கம் வகிக்கும் பாஜக அரசு மட்டுமே என்று குறை கூறாமல் இருக்கவில்லை. 
வேதனையுடன் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் இமாம், நம்மிடையே பதிவிட்டு ஆதங்கம் இதோ. ஒவ்வொரு தொழிலிலும் கைதேர்ந்த நபர்கள் இருப்பார்கள் என்பதைப் போன்று 40 கட்டங்களை கடந்தால் மட்டுமே ஒரு பெண்மணியின் பாதங்களை அலங்கரிக்கும் இந்த ஒரு கொலுசை தயாரிக்க முடியும். அந்த வகையில் பார்க்கும்போது ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு சிறப்பம்சமாக கொண்டவர்கள் இருப்பார்கள் இருந்தார்கள். அவர்களின் தற்போதைய நிலை சுண்ணாம்பு அடிப்பது வீட்டு வேலைகளை செய்வது கிடைக்கும் கூலி தொழிலுக்கு செல்வது. இந்த நிலை எப்பொழுது மாறும் என்று தெரியாமல் விழி பிதுங்கி பலர் இந்த தொழிலை விட்டு விலகி சென்று விட்டதாகவும் எஞ்சியிருப்பவர்களால் மட்டுமே சேலத்தின் பெருமையை சேர்க்க கட்டிக் காப்பாற்ற கொண்டிருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். 
நழிவடைந்து வரும் வெள்ளி கொலுசு உட்பட வெள்ளி பொருட்களின் உற்பத்தியை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: