சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று மாங்கனி மாநகருக்கு பெருமை சேர்த்த சிற்ப ஸ்தபதி.
சேலம் கன்னங்குறிச்சியை சார்ந்தவர் ராஜா என்கின்ற சிற்ப கலைஞர். இவர் பாலமுருகன் சிற்பக் கலைக்கூடம் என்ற பெயரில் அதே பகுதியில் ஸ்தாபனம் ஒன்றை நிறுவி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பஞ்சலோக சிலைகள், கோவில் திருப்பணிகள், கற்சிற்பங்கள், மரச் சிற்பங்கள் மேற்கண்ட சிற்பக்கலை சார்ந்த பணி வேலைகள் அனைத்து சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி மேற்கொண்டு முதன்மை கலைஞராக தமிழக அளவில் திகழ்ந்து வந்தவர் என்ற பெருமைக்குரியவர் ராஜாஸ்தபதி. இவரது சிற்பக்கலை திருப்பணிகளை போற்றி ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்திய திருநாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டது.
அதன் அடிப்படையில் புது தில்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் இந்திய குடியரசுத் தலைவர் மேதகு த்ரௌபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார். இந்திய திருநாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று மாங்கனி மாநகரான சேலத்திற்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர் ராஜா ஸ்தபதிக்கு கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் மாணவரின் முக்கிய பிரமுகர்களும் உற்றார் உறவினர்களும் தொடர்ச்சியாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நமது செய்தி குழு நேரில் அவரை அணுகி வாழ்த்துக்களை தெரிவித்த போது,
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிற்ப கலை துறையில் என்னை சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்து அதற்கான பத்மஸ்ரீ விருதையும் அறிவித்து கௌரவித்த இந்திய குடியரசு தலைவருக்கும் பாரத பிரதமருக்கும் தன்னை தேர்வு செய்த தேர்வு குழுவினருக்கும் முதற்கண் தனது நன்றியை உரித்துதாக்குவதாக தெரிவித்துக் கொண்ட அவர், இளைஞர்கள் மத்தியில் சிற்ப கலையை ஊக்குவிக்கும் வகையில் எதிர்காலத்தில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள சிற்பக் கலைஞர்களின் நலனை ஊக்குவிக்க அதற்கான திட்டங்களை வகுத்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இணையும் முன் வைத்தார்.
மண்ணின் மைந்தரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டுவது மாணவரின் முக்கிய பிரமுகர்களையும் கடந்து பள்ளி மாணக்கர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து கூற வயதில்லை என்றாலும் அவரிடம் ஆசி பெற்று சென்ற வண்ணம் உள்ளனர் என்பது மட்டும் நிதர்சனம்.



0 coment rios: