ஞாயிறு, 28 ஜூன், 2026

சின்னசேலத்தில் மாபெரும் இலவச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முகாம்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சின்னசேலத்தில் மாபெரும் இலவச சிறுநீரக மாற்று  அறுவை சிகிச்சை முகாம்.

டயாலிசிஷிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் சீரகாப்பாடி விம்ஸ் மருத்துவமனை மற்றும் சின்னசேலம் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய ஏதும் இலவச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முகாம்  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நடைபெற்றது. ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை, விம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், மருத்துவருமான மீனாட்சி சுந்தரம் அறிவுறுத்தலின் பேரில்,
மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் வழிகாட்டுதலின்படி, மருத்துவமனையின் முதன்மை நரம்பியல் நிபுணர் மருத்துவர் மோகன்பாபு துவக்கி வைத்த இந்த சிறப்பு முகாமில், மருத்துவமனையன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, இசிஜி, சிறுநீரக மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த முகாமில், நீண்ட காலமாக நீரிழிவு நோய்க்கு மருந்து உட்கொள்பவர்கள், அதிக உடல் பருமன் கொண்டவர்கள்,  உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்,  கை கால்கள் மற்றும் உடலில் வீக்கம் உள்ளவர்கள், அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுபவர்கள், சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள், சிறுநீர் கழிப்பது எரிச்சல் வலி அல்லது இரக்கம் காண்பவர்கள் மற்றும் குடும்பத்தில் சிறுநீரக நோய் வரலாறு உள்ளவர்கள் கலந்து கொண்டு இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர். 
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சின்னசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: