வியாழன், 25 ஜூன், 2026

தமிழக விவசாயிகளின் நலன் கருதி 2026 2027 ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிகையில் தென்னை மற்றும் பனை மர கள்ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை அவர்கள் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தனது தலைமையில் பூட்டு போடும் போராட்டம். தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி எச்சரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக விவசாயிகளின் நலன் கருதி 2026 2027 ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிகையில் தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இரக்கும் கள்ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை  செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தனது தலைமையில் பூட்டு போடும் போராட்டம். தமிழக அரசுக்கு  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி எச்சரிக்கை. 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு அவசர எச்சரிக்கை கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி எழுதியுள்ளதாவது, தமிழக விவசாயிகள் தங்களது நிலத்தில் சாகுபடி செய்துள்ள தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இயற்கையான முறையில் கலப்படம் இல்லாமல் பெறப்படும் கள்ளானது உணவில் ஒரு பகுதியாகும். மக்கள் தினமும் பருகி வருகின்றனர்.
அத்தகைய கள்ளுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க கோரி பலமுறை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் தமிழக அரசு இதுவரை கள்ளுக்கு உண்டான தடையை நீக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.‌ தமிழக அரசின் நாட்டுக்கும் மனித உயிருக்கும் ஆபத்தை விலை விக்கும் மதுபானத்தை டாஸ்மாக் கடைகள் மூலமாக  வருவாயை பெருக்கி வருவதில் தான் அதிகப்படியான ஆர்வம் காட்டி வருகிறது. தென்னை மற்றும் மற்றும் பனை மரத்திலிருந்து இறக்கும் கள்ளு மனிதனின் உடலுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருளாகும். இது ஒரு போதை பொருள் அல்ல தமிழக அரசு கள்ளுக்கு உண்டான கடையை நீக்கினால் பல லட்சம் விவசாயிகள் விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரம் ஏற்றம் பெறும். 
இதனால் தென்னை மற்றும் பனை மரம் ஏறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும். தமிழக விவசாயிகளின் நலன் கருதி தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும். தமிழகத்தை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் கடந்த 1.1.87 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு கள்ளில் கலப்படம் என்று கூறி தடை செய்துள்ளது. எனவே டி வி கே அரசு தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 2026 - 2027 ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையின் போது அறிவிப்பு வெளியிட வேண்டும். இது சம்பந்தமாக அறிவிப்பு வெளியிடாவிட்டால், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் வேலுச்சாமி ஆகிய எனது தலைமையில் தமிழக முழுவதும் முழுவதும் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் அரசு மதுபான கடைகளுக்கு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அவசர கடிதம் வாயிலாக தெரிவித்துக் கொள்வதாக மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல் மதுவிலக்கு மற்றும் ஆயத்திருவை அமைச்சருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அவசர கடிதத்தில் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: