சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
கடந்த ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட வணிகர் நல வாரியத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் இடம்பெறாதது தொடர்பாக மன வருத்தத்தை அளித்துள்ளதை போகும் வகையில் பேரவை நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில மாநாட்டில் தமிழக முதலமைச்சர் க்கு கோரிக்கை தீர்மானம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில மாநாடு நடைபெற்றது. பேரவையின் மாநில பொதுச் செயலாளர் மெஸ்மர்கந்தன் வெள்ளையன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மாநில பொருளாளர் ராயல் பீர்முகமது மற்றும் சேலம் மாவட்ட தலைவர் ராசி சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பேரவையின் மாநில தலைவர் சௌந்தர் ராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வணிகர்களின் நலன் குறித்து தமிழக அரசை வலியுறுத்தும் வகையில், சிறப்புரையாற்றினார். தமிழகம் முழுவதும் சுமார் 7000 கிளைச் சங்கங்களைக் கொண்டு பேரவை கடந்த அரை நூற்றாண்டுகளாக வெற்றி நடை போட்டு செயல்பட்டு வருகிறது. ஜாதி, மதம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு வணிகர்களின் நலனுக்காகவும் பொது மக்களின் நலனுக்காகவும் போராடிவரும் பேரவையின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் ஆன்லைன் வணிகத்தின் ஆதிக்கத்தால் சிறு வணிகம் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டு வருகின்றது. உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கவும், அந்நிய பொருட்களின் ஆதிக்கத்தை முறியடிக்கவும் ஆன்லைன் வர்த்தகத்தின் ஆதிக்கத்தின் கட்டுப்படுத்தவும் திட்டங்களை வகுத்து வணிகர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றிய தமிழக முதலமைச்சர் வழிவகை செய்ய வேண்டும், பெரம்பூரில் பேரவையின் நிறுவனத் தலைவர் வாழ்ந்த நெல் வயல் சாலைக்கு வெள்ளையன் சாலை என்று பெயர் மாற்றி வணிகர்களின் காவலராக திகழ்ந்த மாபெரும் தியாகியை தமிழக அரசு கௌரவப்படுத்த வேண்டும் மற்றும் தமிழக முதலமைச்சர் சமர்ப்பிக்க இருக்கின்ற முதல் நிதி நிலை அறிக்கையில் நலிவுற்ற வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட உதவிட வேண்டும் என்பன ஒலித்த ஏழு முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் தமிழக முழுவதும் உள்ள மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பேரவை உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



0 coment rios: