சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
தமிழக விவசாயிகளின் நலன் கருதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கோரிக்கை.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தமிழக விவசாயிகளின் அத்தியாவசிய கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, கடந்த 25.5.2026 அன்று விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதில் சிறு குறு மற்றும் பெரு விவசாயிகள் என்ற பிரித்தாலும் சூழ்ச்சியுடன் பயிர் கடன் தள்ளுபடி செய்தது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்ததைப் போல தமிழக அரசும் தள்ளுபடி செய்ய வேண்டும் என
வரும் 18 ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் மறுபரிசீலனை செய்து அறிவிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்வதாக தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை கடிதத்தின் நகல் வேளாண்மை துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



0 coment rios: