சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
18 ம் தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சிவபெருமாள் தமிழக அரசுக்கு கோரிக்கை.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவபெருமாள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 18ஆம் தேதி கூட உள்ள நிலையில் அன்று தமிழக விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களில் உலகை போன்று தமிழக விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கி தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவை கூடும் தினத்தன்று அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி அறிக்கையும் தயார் செய்யப்பட்ட நிலையில் பின்னர் வந்த திமுக அரசு அதனை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டதாகவும், தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைமையிலான அரசு பாரதப் பிரதமரை சந்தித்து காவிரி கோதாவரி திட்டத்தை முழுமையாக தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அவர் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து என்பது தொடர்ச்சியாக எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் என்பதாலும், மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் தமிழகத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து மேட்டூர் அணையில் 80 அடிக்கு மேல் இருந்தால் தான் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும் என்பதால், டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி செய்வதில் விவசாயிகளிடையே குழப்பு நிலை நீடிப்பதாகவும் ஆகவே ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக நீர் பாசனத்துறை அமைச்சர் மற்றும் நீர் பாசன துறை அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் தங்களை போன்று விவசாய சங்க பிரதிநிதிகள் அழைத்து மேட்டூர் அணையின் திறப்பது தொடர்பாக ஆலோசித்து அதன் பிறகு முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட சிவபெருமாள் நியாய விலை கடைகளில் பாமாயில் கொடுப்பதற்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.



0 coment rios: