வெள்ளி, 5 ஜூன், 2026

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் மாறுவோம் மாற்றுவோம் என்ற நோக்கத்தின் we the leaders இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்கள் சேலத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் மாறுவோம் மாற்றுவோம் என்ற நோக்கத்தின் 
we the leaders இயக்கத்தில் இணைந்த உறுப்பினர்கள் சேலத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்.

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் we the leaders இயக்கத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் இணைந்ததை அடுத்து, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓரியண்டல் சக்தி தியேட்டர் முன்பு சேலம் மாவட்ட உறுப்பினர்கள் பொது மக்களுக்கு கேக் கொடுத்தும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உறுப்பினர்கள் நாகராஜ் வெங்கடேசன், கார்த்திக், நாகராஜேஸ்வரன், மாதவராஜ் ஆகியோர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து தங்களது மகிழ்ச்சியை பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் இது குறித்து கூறும் போது,  அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் மாறுவோம் மாற்றுவோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இயக்கத்தில் இணைந்த அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஒன்பது லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இந்த இயக்கமானது அண்ணாமலையின் கரத்தினை வலுப்படுத்துவோம் என்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: