வெள்ளி, 5 ஜூன், 2026

NCCF நிறுவனம் கொள்முதல் செய்துள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ள நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்திடுக. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

NCCF நிறுவனம் கொள்முதல் செய்துள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ள நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்திடுக. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை. 

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்று உள்ள த.வெ.க தலைமையிலான தமிழக அரசுக்கு வாழ்த்துக்களையும், தமிழக விவசாயிகளுக்கான அத்தியாவசிய கோரிக்கைகள் குறித்தும் அவ்வப்போது தமிழக அரசுக்கு பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி. 
அந்த வகையில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை மத்திய அரசு நிர்ணயம் செய்த தனியார் நிறுவனமான NCCF நிறுவனம் கொள்முதல் செய்து வந்துள்ளது. மூன்று மாதங்கள் கொள்முதல் செய்த நெல்லுக்கு உண்டான தொகையை விவசாயிகளுக்கு தற்பொழுது வரை வழங்கவில்லை. விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 400 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ள நிலுவைத் தொகையினை தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்கு பெற்றுத்தர தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தமிழக அரசை இந்த அறிக்கையின் வாயிலாக வலியுறுத்துவதாக சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி குறிப்பிட்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: