வியாழன், 4 ஜூன், 2026

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு திரும்பிய மாணவச் செல்வங்கள். சேலம் முருங்கப்பட்டியில் வாசனை மலர்களை கொடுத்து, குழந்தைச் செல்வங்களை வரவேற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு திரும்பிய மாணவச் செல்வங்கள். சேலம்  முருங்கப்பட்டியில் வாசனை மலர்களை கொடுத்து, குழந்தைச் செல்வங்களை  வரவேற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு நாளில் புதிய மாணவ மாணவிகளை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் மலர் தூவி, இனிப்பு வழங்கி வரவேற்கும் நிகழ்வு அதிகாரப்பூர்வமாக 2022-2023 கல்வி ஆண்டு முதல், தமிழக அரசின் வழிகாட்டுதலில் தீவிரப்படுத்தப்பட்டு அன்புடன் வரவேற்கிறோம் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு திரும்பிய மாணவ செல்வங்களை வரவேற்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கபட்டி இருவழி அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. கோடை விடுமுறைக்குப் பின் வரும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, பள்ளி மீதான ஆர்வத்தை  அதிகரிக்கும் வகையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் கு. சரவணன் தலைமை வகித்தார். 
பள்ளிகளில் தோரணங்கள் கட்டப்பட்டு, மேள தாளங்களுடன், ஆசிரியர்கள் மலர் கொடுத்து மாணவர்களை ஆசிரியர் பயிற்றுனர் திருமதி தேன்மொழி வாசனை மலர்களை கொடுத்து வரவேற்றார். புதிய பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் விலையில்லாப் பொருட்கள் முதல் நாளிலேயே வழங்கப்படுகின்றன. இந்த பாரம்பரியம், 2026-27 கல்வி ஆண்டில், ஜூன் 4, 2026 அன்று, கோடை வெப்பம் காரணமாக சற்று தாமதமாகத் திறக்கப்பட்டது என்பதும், விழா கோலாகலமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: