சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலம் எடப்பாடியில் தீபம் அறக்கட்டளையின் சார்பில் 15 வது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
சேலம் தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தீபம் அறக்கட்டளையின் தலைவர் முனைவர் பழனிச்சாமி மற்றும் செயலாளர் சிட்டிசன் ஹரி பாஸ்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நடைபெற்ற முடிந்த அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் மாநில அளவில் விளையாடி பள்ளிக்கு பெருமை சேர்த்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கௌரவித்தனர். 15 வது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்வில், பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் எடப்பாடி நகரின் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



0 coment rios: