திங்கள், 1 ஜூன், 2026

தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய இந்தாண்டு திட்டமிட்டபடி ஜூன் 12க்குள் தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெற்றுத் தர மறுத்தால், தனது தலைமையில் கர்நாடக அணைக்கு சென்று தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறப்போம். தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி நினைவூட்டல்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய இந்தாண்டு திட்டமிட்டபடி ஜூன் 12க்குள் தமிழ்நாட்டிற்கு உண்டான  காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெற்றுத் தர மறுத்தால், தனது தலைமையில் கர்நாடக அணைக்கு சென்று தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறப்போம். தமிழக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி நினைவூட்டல்.

டெல்டா மாவட்டங்களின் ஜீவாதாரமாக விளங்கி வரும் சேலம் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது விதி. அந்த வகையில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளும் குருவை சம்பா மற்றும் தாளடி விவசாயத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியான ஜூன் 12 தண்ணீர் திறந்து விடப்படுமா என்ற சந்தேகம் டெல்டா மாவட்ட விவசாயிகள் இடையே எதிர்பார்ப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா விவசாயிகள் நலன் கருதி ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கம். இதில் சுமார் 5 லட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு வருகின்ற 12 ந் தேதி குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது குறித்து இதுவரையிலும் தவெக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது  காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பதிவிட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி, தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய இந்தாண்டு திட்டமிட்டபடி தமிழ்நாட்டிற்கு உண்டான  காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அரசிடம் பேசி உரிய நேரத்தில் தண்ணீரை பெற்று தர முன்வர வேண்டும் என்றும் தவெக அரசு வருகின்ற 12 ந் தேதி அன்று மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் கர்நாடகா அரசிடம் உரிய காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு பெற்று தராமல் கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக நடந்துகொண்டால் இதனை முறியடிக்கும் விதமாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எனது தலைமையில் தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி வருகின்ற 12 ந் தேதி அன்று தமிழக எல்லையான ஓசூர் ஜீவ்ஜீவ்வாடியில் இருந்து புறப்பட்டு கர்நாடக அணைக்கு சென்று தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறப்போம் என   தமிழக அரசுக்கு நினைவுபடுத்துகிறேன் அந்த கடிதத்தில் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: