சனி, 30 மே, 2026

எம்.சாண்ட், பி. சாண்ட், ஜல்லி, சிப்ஸ் ஏற்றி வரும் லாரி ஓனர் மற்றும் டிரைவர்கள் மீது வழக்கு போடுவதை கனிம வளத்துறை அமைச்சர் கைவிட வேண்டும். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

எம்.சாண்ட், பி. சாண்ட், ஜல்லி, சிப்ஸ் ஏற்றி வரும் லாரி ஓனர் மற்றும் டிரைவர்கள் மீது வழக்கு போடுவதை கனிம வளத்துறை அமைச்சர் கைவிட வேண்டும். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். 

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் குரங்கு சாவடியில் நடந்தது. மாவட்ட செயலாளர் கண்ணயன் வரவேற்று பேசினார். பொருளாளர் சந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் ஏ.கே.பழனிச்சாமி
சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைமை நிலைய செயலாளர் மாரியப்பன் உட்பட சங்க நிர்வாகிகள் மணல் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்த செயற்குழு கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மணல் லாரி உரிமையாளர்கள், டிப்பர், ஜே.சி.பி சில்லரை வியாபார சங்க நிர்வாகிகள் கலந்து
கொண்டனர். கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு சேலம் மாவட்டம் மணல் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக்
கொள்கிறோம். எம்.சாண்ட், பி. சாண்ட், ஜல்லி, சிப்ஸ் ஏற்றி வரும் லாரி ஓனர் மற்றும் டிரைவர்கள் மீது வழக்கு போடுவதை கனிம வளத்துறை அமைச்சர் கைவிட வேண்டும். டிரான்ஸ் பாஸ் உடனடியாக அரசு
வழங்க வேண்டும் எந்தெந்த குவாரி என்ற விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என தமிழ அரசை வலியுறுத்துகிறோம்.காவேரி
படுகைகளில் ஆங்காங்கே அதிக அளவு மணல் தேங்கியுள்ளது. தமிழக முதல்வர் மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாக்க
வேண்டியும், டிரைவர்கள், என்ஜினியர்கள், கொத்து வேலை செய்பவர்கள் செங்கல் சூளை செய்பவர்கள் என அனைத்து கட்டுமான தொழில் சார்ந்தவர்கள் 25 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திருட்டு மணலை ஒழிக்க தனி சிறப்பு படையை உருவாக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான கலால், வாட் வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: