வியாழன், 11 ஜூன், 2026

கர்நாடகா அரசிடம் உரிய காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு பெற்று தரவில்லை என்றால், தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் புரட்சி புயலாக உருவாகும். தவெக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கடிதம் வாயிலாக அறிவுறுத்தல்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

கர்நாடகா அரசிடம் உரிய காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு பெற்று தரவில்லை என்றால், தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் புரட்சி புயலாக உருவாகும்.  தவெக அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கடிதம் வாயிலாக அறிவுறுத்தல்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றினை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா விவசாயிகள் நலன் கருதி ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி ஆன இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இதில் சுமார் 5 லட்சம் ஏக்கருக்கு மேலான  விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 
இந்த ஆண்டு  குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து இதுவரையிலும் தவெக அரசு நீர்வளத்துறை மூலம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது  காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய இந்தாண்டு திட்டமிட்டபடி தமிழ்நாட்டிற்கு உண்டான  காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அரசிடம் பேசி ஜீன் இம்மாதம் இறுதிக்குள் உரிய நேரத்தில் தண்ணீரை பெற்று தர முன்வர வேண்டும். தவெக அரசு இம்மாதம் இறுதிக்குள்  மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் கர்நாடகா அரசிடம் உரிய காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு பெற்று தராமல் கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக நடந்து கொண்டால் தமிழகத்தில் விவசாயிகள் புரட்சி புயலாக உருவாகும் என தவெக அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தங்களுக்கு நினைவூட்டும் விதமாக, இந்த கடிதம் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். 
தமிழகத்தில் விவசாயிகள் புரட்சி புயலாக உருவாகும் என தவெக அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தங்களுக்கு நினைவூட்டும் விதமாக இந்த கடிதம் வாயிலாக தெரிவித்துக் கொள்வதாக தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: