S.K. சுரேஷ்பாபு.
கல்வி வளர்ச்சி நாளின் தந்தையான கர்மவீரரின் 124 வது பிறந்தநாள் விழா. தாதை. சேகோ. ரவிக்குமார் தலைமையில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் (ஜூலை 15) ஆண்டுதோறும் தமிழக அரசால் 'கல்வி வளர்ச்சி நாளாக' (Educational Development Day) கொண்டாடப்படுகிறது. ஏழை மாணவர்களின் கல்விக்காக அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் மற்றும் இலவச சீருடைத் திட்டங்களை நினைவுகூரும் வகையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில் கர்மவீரரின் 124 வது பிறந்தநாள் விழா சேலத்தில் உள்ள பல்வேறு அமைப்பினரால் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சேலம் 2- வது அகாரம் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் கல்விச் செம்மலுமான கர்மவீரர் காமராஜரின் திரு உருவ சிலைக்கு சேலம் மாவட்ட மக்கள் சிந்தனையாளர் சங்கத்தைச் சேர்ந்த சேலம் தாதை.சேகோ.ரவிக்குமார் தலைமையில் ஐயாவின் திருவுரு சிலைக்கு பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கர்மவீரர் காமராசர் அவர்களுடைய
124 வது பிறந்த தினத்தை முன்னிட்டு
அவருடைய திரு உருவ சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இன்றைய நிகழ்வில்,
திரு O.S. கணேஷ், சேலம் மாவட்ட மக்கள் சிந்தனையாளர் சங்க தலைவர்,
திரு சிவசுப்பிரமணியன் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர்,
திரு பிரபு, சமூக நல பேரவை தலைவர், கவிஞர் திரு மா. புகழேந்தி,
கவிஞர் திரு செல்வராசா,
சமூக ஆர்வலர்கள்
திரு ஜெயவேல் , திரு குணசேகரன், திரு மனோகரன், திருமதி ஸ்ரீ நீலா உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு கர்மவீரரின் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.



0 coment rios: