வெள்ளி, 31 ஜூலை, 2026

மேகதாது மற்றும் காவிரி நீர் பங்கீட்டு விவகாரம். தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் கர்நாடக அரசை கண்டித்து வரும் 13-ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து தமிழகம் வழியாக செல்லும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடுத்து நிறுத்தும் மிகப்பெரிய போராட்டம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மிகக் கடுமையான எச்சரிக்கை.

நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.

மேகதாது மற்றும் காவிரி நீர் பங்கீட்டு விவகாரம். தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் கர்நாடக அரசை கண்டித்து வரும் 13-ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து தமிழகம் வழியாக செல்லும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடுத்து நிறுத்தும் மிகப்பெரிய போராட்டம். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மிகக் கடுமையான எச்சரிக்கை.

தமிழகத்திற்கு தொடர் துரோகத்தை இழைத்து வரும் கர்நாடக அரசுக்கு எதிராக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மிகக் கடுமையான எச்சரிக்கை அறிக்கையினை வெளியிட்டுள்ளார். 
அந்த அறிக்கையில், கர்நாடகா அரசு இந்த ஆண்டுக்கான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு தர மறுக்கிறது. அதேபோல் காவிரியின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டும்  பணி குறித்தத முயற்சியை  கர்நாடகா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு உயிர் தண்ணீரை தரததால் தமிழகத்தில் கடுமையான வறட்சியின் காரணமாக தொழில் வளம் இல்லாமல் வளர்ச்சி  முற்றிலும் முடங்கும்  வாய்ப்பு   உள்ளது.டெல்டா விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பாசன வசதி இல்லாதால் ஒருகோடி லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள 22 மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உருவாகும். காவிரி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் காவிரி ஊற்றுநீர் பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாசன வசதி இல்லாமால்  தற்போது முடங்கிப்போய் உள்ளது .
தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அணைகளில் இருந்து கர்நாடகா அரசை விடுவிக்க கோரி காவிரி ஒழுங்காற்றுகுழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவை கர்நாடகா அரசு செய்படுத்த தொடர்ந்து மறுத்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் கர்நாடகா அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எடுத்துறைபது என்னவென்றால் கர்நாடகாவின் தொழில் வளம் வளர்சிக்காக தமிழ்நாட்டில் உற்பத்தி செய்துதான் மின்சாரம் கர்நாடகா செல்கிறது அதேபோல் தமிழ்நாட்டின் வழியாகத்தான் கேரள மாநிலத்தில் இருந்து  எரிவாயு  செல்கிறது. 
கர்நாடகா மாநிலம் வளர்ச்சி நோக்கி செல்வதற்கு மிகப்பெரிய பங்கு என்னவென்றால் சென்னை துறைமுகம் அதேபோல் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் துறைமுகம் ஆகியவைகளில் கர்நாடகா உற்பத்தி செய்யும்  பொருட்கள் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம்தான் தமிழகம் வழியாக துறைமுகம் செல்ல வேண்டிய நிலைமை கர்நாடகாவிற்கு உள்ளது. இதை அங்கு கன்னட அரசியல் கட்சி தலைவர்கள் உணராமல் தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அணைகளில் தற்போது போதிய தண்ணீர் இருப்பு வைத்துக்கொண்டு தவறான முறையில் கர்நாடகாவில் கடும் வறட்சி என்று தவறான தகவல்  கூறி  மறுப்பதாலும் தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலும் பறிக்கும் திட்டத்தோடும்,  மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டியே தீருவோம் என்று கூறி முழக்கம்மிட்டு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டிற்கு எதிராக வருகின்ற 13 ந் அன்று கர்நாடகாவில் பந்து என்று அறிவித்துள்ளது. 
இந்த நிலையில் அதே நாளில் வருகின்ற 13 ந் தேதி முதல் கர்நாடகாவில் இருந்து சரக்கு ரயில் மூலம் தமிழகம் வழியாக துறைமுகம் பகுதிக்கு ஏற்றுமதி செய்ய செல்லும் சரக்கு ரயில்கள் மற்றும்  வெளிநாட்டில் இருந்து துறைமுகம் வழியாக கர்நாடகவிற்கு செல்லும் சரக்குகள் மற்றும் கர்நாடகா மாநிலம் வளர்சிக்காக செல்லும் சரக்கு ரயில்கள் மேலும் தமிழகம்  வழியாக பயணிகளை ஏற்றி செல்லும் விரைவு ரயில்கள் தமிழ்நாட்டில் இருந்து உற்பத்தி செய்து கர்நாடகா செல்லும் மின்சாரம் கொச்சின் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக கர்நாடகா செல்லும் எரிவாயு ஆகியவற்றை தொடர்ந்து கர்நாடகாவிற்கு செல்ல விடாமல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்க அமைப்புக்கள் மற்றும் விவசாயிகளையும் மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடகாவிற்கு எதிராக வருகின்ற 13 ந் தேதி அன்று முதல் தமிழகம் தழுவிய மிகப்பெரிய தொடர் போராட்டம் நடத்தப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடகா அரசுக்கு இந்த அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: