வியாழன், 30 ஜூலை, 2026

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கை விரிப்பு.கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை,. தமிழ்நாடு அரசு தான் விரைந்து உச்சநீதிமன்றம் நாட வேண்டும். டி.கே.சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி பதிலடி.

நாமக்கல்,
S.K.சுரேஷ்பாபு.

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கை விரிப்பு.கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை,.  தமிழ்நாடு அரசு தான் விரைந்து உச்சநீதிமன்றம் நாட வேண்டும். டி.கே.சிவகுமாருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி பதிலடி.

மேகதாது விவகாரம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காதது, மத்திய அரசிற்கு ஒத்துழைக்காதது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை உதாசீனப்படுத்துவது என நாளுக்கு நாள் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவர்களின் போக்கு சொல்லொனா துயரத்தை தமிழக விவசாய பெருங்குடி மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது என்பதை யாராலும் மறுத்து விடவும் மறந்து விடவும் முடியாது. அந்த வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தொடர் உத்தரவுகளை உதாசீனப்படுத்தும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரின் செயலால் பாய்ந்தோடிய காவிரி, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வரை பாலைவனமாக காட்சி அளித்து வருகின்றன என்பது வேதனையின் உச்சம். 
இது காவிரியை மட்டுமே நம்பி முப்போகங்களை விளைவித்து வரும் டெல்டா மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் மனதை நொறுக்கி விட்டு உள்ளது என்றே கூறலாம். இந்த விவகாரம் தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கர்நாடக அரசின் செயலுக்கு அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில், ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு  தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில்,  கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கை விரித்த நிலையில்,  மீண்டும் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த கட்ட உத்தரவு பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாய பெருங்குடி மக்கள் இடையே ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கர்நாடக முதல்வர் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்து இருப்பது தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் நிதர்சனம். 
நிலைமை இப்படி இருக்கு கர்நாடக முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி பதிலடி கொடுத்துள்ளதோடு தமிழக அரசுக்கு சில வழிமுறைகளையும் கூறியுள்ளார். 
அதில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல், அதனை செயல்படுத்தாமல், கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி, தமிழக அரசு  தான் விரைந்து உச்சநீதிமன்றம் நாட வேண்டும் என்றும் வழிமுறை கூறியுள்ளார்.
தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக அரசை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் சங்க தலைவர் தொல், திருமாவளவன் உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை பதிவிட்டு உள்ள நிலையில், வரும் 3-ம் தேதி பெங்களூர் செல்ல உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக சார்பில் கர்நாடகாவிற்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போராட்ட அறிவிப்பை அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: