நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.
கர்நாடக விளைப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை தடுத்து நிறுத்தும் போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமியை போலீசார் கைது ஆக சொல்லி வற்புறுத்தியதால் பரபரப்பு.
கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டி தமிழ்நாட்டின் உரிமை பங்கீட்டு தண்ணீரை தடுத்து நிறுத்தும் முயற்சிக்கு கர்நாடகா அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கர்நாடாகாவில் இருந்து உற்பத்தி செய்து வரும் பூக்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் தானிய வகைகள் தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்காகவும் மற்ற தேவைக்கா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக பொருட்களை கேரள மாநிலம் கொச்சின் துறைமுகம் கொண்டு வரும் வாகனங்களை தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்துவோம் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
( கோப்பு புகைப்படம் )
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அவர்கள் தலைமையில் இன்று நடைபெற இருந்த போராட்டத்திற்கு, காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமிழக விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க, சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.
தமிழக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி உட்பட அங்கு திரண்டிருந்த விவசாய பெருங்குடி மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, போலீசார் கைது ஆக சொல்லி வற்புறுத்தியதால் சம்பவ பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதனை அடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய ராகவன், துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ( பொறுப்பு ) தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக நின்று இருந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துவிட்டு தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமையிலான விவசாய பெருங்குடி மக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.
இதனால் பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.



0 coment rios: