சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாமன்ற கூட்டத்தில், திமுக மேயரால் தொடர்ச்சியாக அவமதிக்கப்படும் பெண் துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம். சேலம் மாநகர மேயர் இன் அநாகரிக செயல் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் அளிக்க உள்ளதாகவும் வேதனை.
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயருக்கான இருக்கையை கீழே இறக்கி போட்ட மேயரின் செயலை கண்டித்து கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் இரந்து துணை மேயர் திருமதி சாரதா தேவி மாணிக்கம் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக துணைமேல் திருமதி சாரதா தேவி மாணிக்கம் சென்னை சென்றுள்ள நிலையிலும் கூட, இன்றும் சேலத்தில் நடைபெற்ற மாமன்ற இயல்பு கூட்டத்தில், பெண் துணை மேயர் என்றும் பாராமல், மாமன்றத்தின் மாண்பையும் மீறி சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரனின் தூண்டுதலின் பெயரில் மீண்டும் துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் அவர்களின் நாற்காலி கீழே போடப்பட்ட அவலம். இதற்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உட்பட 3 மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். சேலம் மாநகராட்சி மேயரின் இந்த செயலுக்கு துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு இது சம்பந்தமாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, சேலம் மேயர் மீது புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



0 coment rios: