நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.
மேகதாது அணை விவகாரம். வரும் 30.07.2026 முதல், கர்நாடகாவில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தில் விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் பூக்கள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றி வரும் கனரக சரக்கு வாகனங்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கர்நாடக முதலமைச்சருக்கு கடும் எச்சரிக்கை.
நாளுக்கு நாள் தமிழக மற்றும் கர்நாடகா விடையே விஸ்வரூபம் எடுத்து வரும் மேகதாது அணை விவகாரத்தின் தொடர்ச்சியாக, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார்.
அதில் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளதாவது, கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி, தமிழகத்திற்குரிய நீர் பங்கீட்டைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதைக் கண்டித்து, இந்தச் செய்திக்குறிப்பின் வாயிலாக நான் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். அதன்படி, 30.07.2026 முதல், கர்நாடகாவில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தில் விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் பூக்கள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றி வரும் கனரக சரக்கு வாகனங்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். மேலும், கர்நாடகாவிலிருந்து தமிழகம் வழியாகக் கேரள மாநிலத்திற்குச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களையும் நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்று கர்நாடக முதலமைச்சர் டி கே சிவக்குமார் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கடுமையான எச்சரிக்கையை பதிவு செய்துள்ளார்.



0 coment rios: