வெள்ளி, 3 ஜூலை, 2026

தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடகா அணைகளில் காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க கோரி போராடட்ம். 15.7.2026 அன்று தமிழகத்தில் உள்ள காவிரி பாசன வசதி பெறும் அனைத்து விவசாயிகளும் ஓசூரில் தவறாது பங்கேற்க தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அழைப்பு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழக விவசாயிகளின் போராட்டம் குறித்து வேலுச்சாமி கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டுக்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிடாததை கண்டித்து  அங்கு உள்ள அணைகளில் இருக்கும் காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இளம் விவசாயிகள் சங்கம் இணைந்து வருகிற 15.7.2026 அன்று காலை 11 மணிக்கு  தமிழக எல்லையான ஓசூர் C S I மருத்துவமனை பகுதியில் இருந்து, தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடகா சென்று அங்கு உள்ள அணைகளில் காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க கோரி போராட உள்ளோம்.
எனவே ‌தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க தமிழகத்தில் உள்ள காவிரி பாசன வசதி பெறும் அனைத்து விவசாயிகளும் தவறாது பங்கேற்க உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: