சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலம் விம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் மரியாதை நிமித்தமாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் விஜய் பார்த்திபன் அவர்களை சந்தித்தார்.
சேலத்தில் புகழ்பெற்ற மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் அதற்கான வசதிகளை கொண்டது சேலத்தை அடுத்துள்ள சின்ன சீரகாபாடி விம்ஸ் மருத்துவமனை. இந்த சிறப்புமிக்க மருத்துவமனையில் நாள்தோறும் உள்நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சேலம் மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் ஏன் வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்த வகையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக டாக்டர் மீனாட்சி சுந்தரம் இருந்து வருகின்றார். அவர் தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள TVK தமிழக அரசின் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சேலத்தைச் சேர்ந்த தமிழன் விஜய் பார்த்திபன் அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அப்பொழுது டாக்டர் மீனாட்சி சுந்தரம் பூங்கொத்துக்கொடுத்தும் பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மருத்துவம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன் வைத்ததாகவும் தெரிகிறது. இந்த நிகழ்வின் போது விம்ஸ் மருத்துவமனையின் மருத்துவப் பிரிவு அலுவலர் அருள் மணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.



0 coment rios: