ஞாயிறு, 5 ஜூலை, 2026

தமிழகத்தில் இலவச மின்சாரத்திற்காக போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு. உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மரியாதை. தமிழக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புடன் அணையை தகர்ப்போம் என்றும் சூளுரை.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழகத்தில் இலவச மின்சாரத்திற்காக போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு. உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மரியாதை. தமிழக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புடன் அணையை தகர்ப்போம் என்றும் சூளுரை.

தமிழகத்தில் கடந்த 1970 முதல் 1980 கடுமையான வறட்சி நிலவியது,  அப்போது தமிழக விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்குவதற்கு நிதி கையிருப்பு இல்லாமல் தவித்தனர். பல சிரமங்களுக்கு இடையிலும் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், அப்போதைய தமிழ்நாடு அரசு மூலம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் மற்றும் பண்ணை அபிவிருத்தி கடன் பெற்று, கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் பயிர் செய்துவந்தனர். கிணறு பாசனத்தை நம்பி பயிர் செய்யும் விவசாயிகள், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் மூலம், கிணற்று மோட்டாருக்கு மின் இணைப்பு பெற்று, பயிர் செய்தனர், அவ்வாறு அவர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு அதிக கட்டணம் மின் வாரியத்தால் வசூலிக்கப்பட்டு வந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பருவம் தவறிய மழை பொழிவின் காரணமாக விளைச்சல் இல்லாததால் விவசாயிகளால் மின்சார கட்டணத்தை கட்டமுடியாத நிலையில் மின்சார வாரியம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்து வந்தது. ஒரு புறம்  தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவிய நிலையில், தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம்  வாங்கிய பயிர் கடன்  மற்றும் பண்ணை சாராத கடனை திருப்பி செலுத்த இயலவில்லை.
கடனை திருப்பி செலுத்தாவிட்டால் ஜப்தி என்ற சட்டத்தின் படி, விவசாயிகள் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முயற்சித்தினர். தமிழக விவசாயிகள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு சிதறிய நெல்லிக்காயாக  கிடந்த தமிழக விவசாயிகளை, கடன் தொல்லை, மின்சார கட்டணம்  உயர்வு போன்ற துயரங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக,  தமிழக விவசாயிகள் சங்கத்தை தோற்றிவித்தது  மறைந்த உழவர் பெருந்தலைவர் C . நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் 1970 முதல் 1980 வரை தமிழகம் தழுவிய அளவில் விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது. 
கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு காவல்துறை நடத்திய துப்பாக்கி  சூட்டில், துப்பாக்கி குண்டுக்கு இறையாகி 53 விவசாயிகளும் இறந்துள்ளனர். ‌கிணற்று மோட்டாருக்கு தமிழக அரசு யூனிட்டுக்கு 8 பைசாவாக பழைய கட்டணத்தில்   இருந்து ஒரு பைசா உயர்த்தி 9 பைசாவாக நிர்ணயம் செய்தன் காரணமாக தமிழக விவசாயிகள் சங்கம்‌ சார்பில் ஒரு பைசா உயர்வில் இருந்து அரை பைசாவாக குறைக்க கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து மிகப்பெரிய போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது . அதன் பின்னர் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் அறிவுரைபடி தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒற்றுமையாக நிலைத்து நின்று பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டிய பால் மற்றும் காய்கரிகளை விற்பனைக்கு அனுப்பாமல் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டது தமிழக விவசாயிகள் சங்கம் போராட்தை கண்டு அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்த தமிழக அரசு  பணிந்தது என்று அன்றைய தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிக்கையில் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது.இப்படிபட்ட  சூழ்நிலையில்தான் கடத்த காலக்கட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைக்கா முன்னிறுத்திய  போராட்டம் விளைவாகத்தான்  தமிழக அரசு பயிர் கடன் தள்ளுபடி இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டது என்று அனைத்து விவசாயிகளும் நினைவில் கொள்ள வேண்டும். 5.7.1972 ல் இந்த முதல் போராட்டத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள  பெத்தநாயக்ன்பாளையம் வட்டம்  அதே பகுதியை சார்ந்த 9 விவசாயிகள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கி சுடு நடதத்தியதில் விவசாயிகள் உயிரிழந்தனர். 
இது போல் பல தினங்களில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம், தமிழகம் முழுவதும் நடைபெற்றதில் வேடந்தூர் பெருமாநல்லூர் கோயில்பட்டி குறிஞ்சாங்குளம் ஆகிய பகுதிகளில் 53 தமிழக விவசாயிகள் மீது தமிழ்நாடு அரசு காவல்துறை துப்பாக்கி சுடு ‌நடத்தி, விவசாயிகளை கொன்று குவித்தது. தமிழக அரசு தமிழகத்தில் முதல் துப்பாக்கி சுடு நடத்திய  நாளான 5.7.1972 மறைந்த தியாகிகளுக்கு ஆண்டு தோறும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வீர வணக்க
 நாளாக கடைபிடித்து வருகிறோம். தமிழக விவசாயிகள் கிணறு மோட்டார் மூலம் பாசனம் செய்ய இலவச மின்சாரம் கிடைக்க வழிவகை உருவாக்கி கொடுத்தது, துப்பாக்கி சுடு மூலம் இறந்த தீயாகிகள் மூலம் தான் இலவச மின்சாரம் கிடைக்க பெற்றது என்பதை இப்போது உள்ள இளம் சங்திகள் தெறிந்துகொள்ள வேண்டும். தமிழக விவசாயிகளுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் இன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் திரண்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அங்குள்ள, பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்தூபி பகுதியில்  திரண்டனர்.  
பின்னர் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் சிறந்த தமிழக விவசாயிகள் அங்கிருந்து ஊர்வலமாக இந்த போராட்டத்தில் உயிர்நீத்தை விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு வந்த தமிழக விவசாயிகள் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபிக்கு மாலை அனைத்தும் மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினர். தமிழக காவல்துறையின் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளின் நினைவிடங்கலான பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் நரசிங்கபுரம் பகுதிக்கு சென்று அவர்கள் சமாதிகளுக்கு மாலை அணிவித்தும், மலர்களைத் துவியும் மரியாதை செய்தனர். 
இதுகுறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக காவல்துறையினரால் துப்பாக்கிச் சீட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் தமிழகத்தில் தற்போது விவசாயிகள் அனுபவித்து வரும் பிரச்சினைகளை குறித்தும் பட்டியலிட்ட அவர், தமிழக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் கர்நாடக அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் அணை கட்டுமேயானால் அதனை தகர்த்தெறியவும் தயங்க மாட்டோம் என்று வேலுச்சாமி சூளுரைத்தார். இந்த நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் குடும்பத்தார் என பலர் கலந்து கொண்டனர்.






শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: