வியாழன், 16 ஜூலை, 2026

ஆடி முதல் நாளில் பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தேங்காய் சுட்டு இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்திய மாமன்ற உறுப்பினர்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

ஆடி முதல் நாளில் பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுடன் தேங்காய் சுட்டு இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்திய மாமன்ற உறுப்பினர். 

ஆடி முதல் நாளன்று சேலம் மற்றும் கொங்கு மண்டலப் பகுதிகளில் 'தேங்காய் சுடும் பண்டிகை' கொண்டாடப்படுகிறது. அதர்மத்தை வெல்ல மகாபாரதப் போர் ஆடி 1-ல் தொடங்கியபோது, பாண்டவர்கள் வெற்றி வேண்டி காளி மற்றும் விநாயகரை வழிபட்டதன் அடையாளமாக இது கருதப்படுகிறது. தேய்க்கப்பட்ட தேங்காயினுள் வெல்லம், அவல், பருப்பு உள்ளிட்டவை நிரப்பி நெருப்பில் சுடப்பட்டு பிரசாதமாக படைக்கப்படுகிறது.வரலாறு மற்றும் ஐதீகம்:மகாபாரதப் போர் குருக்ஷேத்திரத்தில் ஆடி மாதம் முதல் தேதியன்று தொடங்கியதாக நம்பப்படுகிறது. இந்தப் போரில் அதர்மம் அழிந்து தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காக, பாண்டவர்கள் கிருஷ்ணனின் அறிவுறுத்தலின்படி விநாயகரையும் மற்ற தெய்வங்களையும் வேண்டி விரதம் இருந்தனர். அப்போது, பல மங்களப் பொருட்களைத் தேங்காய்க்குள் வைத்து அதை நெருப்பில் சுட்டு படையலாக இட்டதாகவும், அதன் பின்னரே போர் தொடங்கியதாகவும் ஐதீகம் உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுபடுத்தும் வகையிலும், விவசாயம் செழிக்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கவும் மக்கள் இன்றும் இதனைக் கடைப்பிடிக்கின்றனர்.கொண்டாடும் முறை:பூரணம் தயாரித்தல்: முழுத் தேங்காயின் மேல்தோலைச் சற்றுத் தேய்த்து, அதன் ஒரு கண்ணைத் துளையிட்டு நீர் வெளியேற்றப்படும்.பின்னர் அத்துளை வழியாகப் பச்சரிசி, வெல்லம், பருப்பு, பொட்டுக்கடலை, எள், அவல் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து நிரப்புவார்கள்.நீண்ட குச்சியில் தேங்காயைக் குத்தி, வீட்டின் வாசலில் மூட்டப்படும் நெருப்பில் சுடுவார்கள்.நெருப்பின் வெப்பத்தில் உள்ளே இருக்கும் வெல்லம் உருகி, சுவையான பிரசாதமாக மாறும். பின்னர் இது குடும்பத்தினருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
அந்த வகையில் சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் புத்து மாரியம்மன் கோவில் அருகே, சிறந்த வழக்கறிஞர், மிகச் சிறந்த சமூக சேவகர் மற்றும் சேலம் மாநகராட்சி ஒன்பதாவது கோட்டை மாமன்ற உறுப்பினர் என்று பன்முகம் கொண்ட தெய்வேலிங்கம் தனது தனது 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுடன்  இணைந்து ஆடி பண்டிகையை வரவேற்கும் விதமாக முதல் நாளான இன்று தேங்காய் சுட்டு இறைவனுக்கு படைப்பு சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்தின் குடும்பத்தார் உட்பட பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: