சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை ஏன் நீக்கவில்லை. த.வெ.க அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கேள்வி. நீக்காததற்கு உண்டான காரணத்தையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் தமிழக அரசு தமிழகத்தில் உள்ள 717 அரசு மதுபான கடைகளை முடியாது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு இன்று புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி த.வெ.க தலைமையிலான தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியத்துடன் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளம், பாண்டிச்சேரி, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களைப் போல் தமிழ்நாடு அரசும் டாஸ்மாக் மூலம் உணவகத்துடன் கூடிய மதுக்கடை நடத்தும் என்ற அறிவிப்பு வெளியிட்ட தவெக அரசு, அதே அண்டை மாநிலங்களில் உள்ளதைப் போல் தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை ஏன் நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தடை நீக்கத்திற்கான காரணத்தை தமிழக விவசாயிகளுக்கு த.வெ.க அரசு தெரிவிக்க வேண்டும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் இந்த அறிக்கையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன் என்று மாநிலத் தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.



0 coment rios: