சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலம் கெங்கவல்லியில் அம்பேத்கர் சிலை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இந்திய குடியரசு கட்சியின் சேலம் மண்டலத்தின் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம், சேலம் மண்டல செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஒதியத்தூரில் டாக்டர் அம்பேத்கர் சிலையை பேரூராட்சி நிர்வாகம் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பொய் வழக்குகளை ரத்து செய்து, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டும் எனக் கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மேலும், கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட 9 தீர்மானங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மங்காப்பிள்ளை, மாநில பொருளாளர் கௌரிசங்கர், மாநில துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில பொறுப்பாளர் வணங்காமுடி கருத்துரையாற்றினார். மாவட்டத் தலைவர் கணேசன் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட செயலாளர்கள் தீனா, ரவிக்குமார், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக விழுப்புரம் மண்டல செயலாளர் இருவேல்பட்டு குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், தர்மபுரி மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கண்ணப்பன், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரப்பன், மாவட்ட அமைப்பு செயலாளர் ரஜினி, பச்சைப்பட்டி குமார், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் வக்கீல், துணைத் தலைவர் சந்தோஷ், இ.ஆ.து. செயலாளர் விஜய பிரபாகரன் மற்றும் தாசநாயக்கன்பட்டி காந்திபுரம் கிளை செயலாளர் பழனிச்சாமி, ராசநாயக்கன்பட்டி பகுதி செயலாளர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகர பொருளாளர் தலித் ராஜு நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



0 coment rios: