வெள்ளி, 17 ஜூலை, 2026

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்க தலைவர்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்க தலைவர்.

வெள்ளி கொலுசு உற்பத்தி என்பது உருக்குதல், கம்பி இழுத்தல், வடிவமைப்பு செய்தல், இணைத்தல், மற்றும் பாலிஷ் செய்தல் ஆகிய பல கட்டங்களைக் கொண்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், குகை போன்ற பகுதிகளில் இத்தொழில் பாரம்பரியமாக கைவினைப் பொருட்களாகவும், நவீன இயந்திரங்கள் மூலமாகவும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.வெள்ளி கொலுசு தயாரிக்கும் செயல்முறை உருக்குதல் மற்றும் கலவை (Melting & Alloying): சுத்தமான வெள்ளி, அதனுடன் கடினத்தன்மை மற்றும் உறுதி சேர்க்க குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது பித்தளை சேர்த்து உயர் வெப்பநிலையில் உருக்கப்பட்டு கட்டிகளாக (Ingots) மாற்றப்படுகிறது. கம்பி இழுத்தல் (Wire Drawing)  வெள்ளிக் கட்டிகள் இயந்திரங்கள் அல்லது உருளைகள் மூலம் மெல்லிய கம்பிகளாக மாற்றப்படுகின்றன. கொலுசின் வடிவத்திற்கு ஏற்ப கம்பியின் தடிமன் தீர்மானிக்கப்படுகிறது. வடிவமைப்பு மற்றும் இணைப்பு (Design & Assembly): மெல்லிய கம்பிகள் முறுக்கப்பட்டு, சிறிய சங்கிலிகளாகவோ அல்லது கொக்கிகளாகவோ வடிவமைக்கப்படுகின்றன. பாரம்பரிய கொலுசுகளில் மணிகள் (குப்பம்) இணைக்கும் பணி கையால் செய்யப்படுகிறது. சோல்டரிங் (Soldering) இணைக்கப்பட்ட பாகங்கள் உறுதியாக ஒட்டிக்கொள்ள மெல்லிய வெள்ளி/செம்பு உலோகக்கலவை கொண்டு சூடுபடுத்தப்பட்டு இணைக்கப்படுகின்றன.பாலிஷ் செய்தல் (Buffing & Polishing): கொலுசுகளுக்கு பளபளப்பான தோற்றத்தை கொடுக்க, ரசாயன கலவைகளுடன் கூடிய பஃபர் (Buffing) இயந்திரங்களைக் கொண்டு தேய்த்து மெருகூட்டப்படுகிறது. தரம் மற்றும் முத்திரை (Hallmarking): இறுதியாக, கொலுசின் தரம் பரிசோதிக்கப்பட்டு ஹால்மார்க் முத்திரை இடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 
இந்த நிலையில் வெள்ளி விற்பனையை ஆன்லைனில் மத்திய அரசு கொண்டு வந்தது, இதன் காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெள்ளியின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெள்ளித் தொழில் முழுமையுமாக சேலம் மாவட்டத்தில் நலிவடைந்து விட்டது என்றே கூறலாம். என்றாலும் வெள்ளி தொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகள் எவ்வளவோ இருந்தாலுமே கூட அதில் முக்கியமாக சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் வெள்ளி மற்றும் தங்கவேல் நகை செய்யும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன கோரிக்கைகள் தற்பொழுது  பிரதானமாக எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர் நல சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் இந்த இரண்டு கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை மனமும் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீ ஆனந்தராஜன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனிடையே மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு குறித்தும் ஏற்கனவே வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் ஸ்ரீ ஆனந்தராஜன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் இடம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: